இலங்கையின் தலைமை நீதிபதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் தலைமை நீதிபதி அல்லது பிரதம நீதியரசர் (Chief Justice of Sri Lanka) இலங்கையின் நீதித்துறையின் தலைவரும், இலங்கை மீயுயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஆவார். தலைமை நீதியரசர் மீயுயர் நீதிமன்றத்தின் பத்து நீதிபதிகளில் ஒருவர் ஆவார். ஏனைய ஒன்பது பேரும் Puisne Justices எனப்படுவர். தலைமை நீதிபதி பதவி இலங்கையில் 1801 ஆம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்டது. தலைமை நீதிபதி நாடாளுமன்றப் பேரவையின் பரிந்துரையின் பேரில் இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
இலங்கையின் முதலாவது தலைமை நீதிபதி கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன் ஆவார். 47வது, தற்போதைய தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரிய ஆவார்.[1]
Remove ads
வரலாறு
1796 ஆம் ஆண்டில் பிரடெரிக் நோர்த் பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநரானார். 1801 ஆம் ஆண்டில் மீயுயர் நீதிமன்ற முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமிக்க சட்டமியற்றப்பட்டது. நீதிபதிகள் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் குறைந்தது ஐந்து ஆண்டு காலம் வழக்குரைஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் சட்டம் கூறியது. அக்காலத்தில் மும்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த தனது நண்பர் சேர் கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன் என்பவரை இலங்கையின் தலைமை நீதிபதியாக நியமிக்க நோர்த் பரிந்துரைத்தார். இதன் மூலம் 1801 மார்ச்சில் காரிங்டன் முதலாவது தலைமை நீதிபதி ஆனார்.[2] அதே ஆண்டு செப்டம்பர் 5 இல் எட்மண்ட் என்றி லசிங்டன் என்பவர் 2 வது நீதிபதியாக (Puisne Judge) நியமிக்கப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads