சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

From Wikipedia, the free encyclopedia

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
Remove ads

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29, 1945) இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.

விரைவான உண்மைகள் சந்திரிக்கா குமாரதுங்க, இலங்கையின் 5வது சனாதிபதி ...

இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்திரிக்கா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டபடிப்பை முடித்தவர். இவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார். இலங்கை திரும்பிய சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குநராகப் பணியாற்றினார். 1974 இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1976 - 1977 காலப்பகுதியில், கொத்தணிப் பண்ணைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.1976- 1979 காலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட ஆலோசகராக பணியாற்றினார்.

1978 இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார். குமாரணதுங்க 1988இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். 1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார்.

1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார்.[1].டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.[2]. அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.[3]. அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

சார்புடைய கட்டுரைகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads