இலதா (பிராந்தியம்)
குசராத்தில் அமைந்திருந்த ஒரு பிரதேசம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலதா ( Lata) என்பது இந்தியாவின் ஒரு வரலாற்றுப் பகுதியாகும். இது இன்றைய குசராத்து மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இலதா வடக்கில் மாகி ஆறுக்கும் தெற்கில் நருமதை அல்லது தப்தி ஆற்றுக்கும் இடையே உள்ள பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. பரூச் அதன் முக்கிய நகரம். மேலும், பிராந்தியத்தின் முன்னாள் தலைநகரம் ஆகும். (தற்கால குசராத்து மாநிலத்தில் இங்கு குறிக்கப்பட்டுள்ளது).
இடமும் அளவும்
7-ஆம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட 'சக்தி-சங்கம்-தந்திரம்' என்ற ஒரு சாக்த சம்பிரதாய உரையில் இலதா அவந்தியின் மேற்கிலும் விதர்பாவின் வடமேற்கிலும் அமைந்திருந்ததாகக் கூறுகிறது. [1]
வரலாற்று அறிஞர் தேஜ் ராம் சர்மாவின் கூற்றுப்படி, இலதாவின் வடக்கு எல்லை மாகி ஆற்றால் அல்லது சில சமயங்களில் நருமதைய் ஆற்றால் உருவாக்கப்பட்டது. தெற்கில், இலதா பூர்ணா ஆறு வரையிலும், சில சமயங்களில் தமன் வரையிலும் பரவியது. அதில் சூரத்து, பரூச், கேடா , வடோதரா ஆகிய பகுதிகளும் அடங்கும்.[1]
ஜார்ஜ் புலரின் கூற்றுப்படி, இலதா மாகி ஆற்றுக்கும் கிம் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியாக இருந்தது. அதன் முக்கிய நகரம் பரூச் ஆகும். [1]
Remove ads
வரலாற்றுக் குறிப்புகள்
பண்டைய புராணங்களிலோ சமசுகிருத இதிகாசங்களிலோ இலதா மண்டலம் பற்ரியக் குறிப்புகள் காணப்படவில்லை. 2-ஆம் நூற்றாண்டின் கிரேக்க-எகிப்திய எழுத்தாளரான தொலெமியின் எழுத்துகளில் இருந்து இப்பகுதியின் ஆரம்பக் குறிப்பு வந்திருக்கலாம். [2] அவர் குறிப்பிடும் லாரிக் எனற பகுதி, ஹெச்.டி. சங்கலியா [3] மற்றும் டி.சி. சிர்கார் உட்பட பல அறிஞர்களால் இலதாவுடன் அடையாளம் காண்கின்றனர். [4] கிரேக்கப் பெயரான லதாவின் பிராகிருத வடிவமான லார்-தேசா ("லார் நாடு") என்பதிலிருந்து இது பெறப்பட்டிருக்கலாம்.[2] மோஃபிஸ் ஆற்றின் படுகையும் (மாகியுடன் அடையாளம் காணப்பட்டது), பேரிகாசா ( பரூச் ) லாரிகேவில் அமைந்திருந்ததாக தொலமி குறிப்பிடுகிறார். [2] வத்சயயனா தனது மூன்றாம் நூற்றாண்டின் காமசூத்திரத்தில் இதை 'லதா' என்று அழைக்கிறார். இது மால்வாவின் மேற்கில் அமைந்துள்ளதாக விவரிக்கிறார். மேலும், அதன் மக்களின் பல பழக்கவழக்கங்களின் கணக்கைக் கொடுக்கிறது.
குப்தர் கால பதிவுகளில், இலதா ஒரு மண்டலமாக அல்லது மாவட்டமாக குறிப்பிடப்படுகிறது. [5] இலதா மண்டலம் 8 ஆம் நூற்றாண்டு வரை நன்கு அறியப்பட்டிருந்தது.[6]சில ஆரம்பகால கூர்ஜர-பிரதிகாரர்கள் மற்றும் இராஷ்டிரகூட பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இலதேசுவர நாடு லதாவாக இருக்கலாம். [7] 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் இலதா சாளுக்கியர்கள் இப்பகுதியை ஆண்டனர்.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads