இலம்பகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இலம்பகம் என்பது காப்பியக் கட்டமைப்பின் புறநிலைக் கட்டமைப்புகளுள் ஒன்றாக தண்டியலங்கார ஆசிரியரால் கூறப்பட்டுள்ள ஒன்றாகும். ஏனையவை சருக்கம் மற்றும் பரிச்சேதம் முதலாயின.

இலம்பகம் என்பதற்கு மாலை அல்லது பேறு என்று பொருள். இலம்பகம் எனும் கட்டமைப்பு திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந் நூலுள் முத்தி இலம்பகம் தவிர ஏனைய எல்லா இலம்பகங்களும் பெண்டிர் பெயரால் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலம்பகம் என்பது பண்டைய தமிழர் பயன்படுத்திய அணிகலனையும் குறிக்கும். இது தலையில் அணியப்பெற்று நெற்றியில் தொங்கும் அணியாகும். இதன் அடியில் சிறு சதங்கைகள் பொன், வெள்ளி, முத்து போன்ற மணிகளால் கோர்க்கப்பட்டிருக்கும். இதனை ஆடல் மகளிர் மற்றும் மணப்பெண் அலங்காரத்திற்கும் பயன்படுத்துவர்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads