இலவங்கப்பட்டை

From Wikipedia, the free encyclopedia

இலவங்கப்பட்டை
Remove ads

இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை / கறுவாப்பட்டை (Cinnamon) என்பது சின்னமாமம் வேரம் (Cinnamomum verum) என்னும் தாவரவியற் பெயரைக் கொண்டது. இது ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். இது இலாரசீயே (Lauraceae) தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தொடக்க கால உற்பத்தியிடமாகவும், அதிக விளையும் இடமாகவும், [ [இலங்கை]]யே இருக்கிறது.[1] இந்த நறுமணப் பொருளாது, அம்மரத்தின் அடித்தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இலவங்கப்பட்டை, மதுவம் இல் உயிரணு சார்ந்த சுவாசத்தின் வீதத்தை குறைக்கிறது. இருப்பினும், இம்மரம் அடிக்கடி, இதற்கு ஒத்த வேறு இனத் தாவரங்களான காசியா, சின்னமாமம் பர்மான்னி போன்றவற்றுடன் இணைத்து, புரிந்து கொள்ளப்படுகிறது. ஏனெனில், இவைகளும் கறிமசால் பொருட்களாகவே எண்ணப்பட்டு, இலவங்கப்பட்டை என்றே அழைக்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் இலவங்கப்பட்டை, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

சொற்பிறப்பியல்

Thumb
இம்மர இலைகள் (தொல்லுயிர் எச்சம்)
  • கின்னமோமோன் (kinnámōmon) என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து சின்னமன் (இலவங்கப்பட்டை) என்ற பெயர் வந்தது. இக்கிரேக்கப் பெயரானது, போஃனிஷியன் என்ற மொழியிலிருந்து வந்தது என்பர். சின்னமாமம் என்ற தாவரவியல் பெயர், இலங்கையின் முந்தைய பெயரான, சிலோன் என்பதிலிருந்து பெறப்பட்டதென்பர்.[2]
  • இலங்கை தமிழில் கறுவாப்பட்டை/கருவாப்பட்டை என அழைக்கப்படுகிறது.
  • ஐரோப்பிய மொழியில், பிரெஞ்சு கேனலே விற்கு தொடர்பான பெயர்கள் இருக்கும். மிகச்சிறிய கேனே (கோரைப்புல், பிரம்பு), அதனுடைய குழாய் போன்ற வடிவத்திலிருந்து வந்தது என்பர்.
  • இந்திய மொழிகள்: மராட்டிய மொழியில், இது "டல்ச்சினி (दालचिनी)" என்று அழைக்கப்படுகிறது. கன்னடத்தில், இது "செக்கே" என்று அழைக்கப்படுகிறது. வங்காளி மொழியில், "டார்ச்சினி" (দারুচিনি) என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கில், டால்ச்சின்ன சக்கா என்று அழைக்கப்படுகிறது. சக்கா என்பதற்கு அடிமரத்தின் பட்டை அல்லது கட்டை என்று அர்த்தமாகும். சமற்கிருதத்தில், இலவங்கப்பட்டை, ட்வாக் அல்லது dārusitā என்று அழைக்கப்படுகிறது. உருது, இந்தி, இந்துஸ்தானியில், டார்ச்சினி (दालचीनी دارچینی) என்று இலவங்கப்பட்டை அழைக்கப்படுகிறது. அஸ்ஸாமியில் அல்சானி என்றும், குஜராத்தியில் டாஜ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • பார்சியில், (பெர்சியா) டார்ச்சின் (دارچین) என்று அழைக்கப்படுகிறது. துருக்கி மொழியில், "Tarçın" என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தோனேஷியாவில், ஜாவா, சுமத்திராவில் இது பயிரிடப்படுகிறது.
  • இது சில நேரங்களில் காசியா வேரா என்றும், காசியா உண்மையான இலவங்கப்பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.[3] இலங்கையில், அசல் சிங்களத்தில், இலவங்கப்பட்டை, குரண்டு [4] என்று அழைக்கப்படுகிறது. இது 17ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் கொரண்டா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மலையாளத்தில், கருகாபட்டா என்றும், தமிழில் பட்டை அல்லது இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
  • அராபிக் மொழியில், இது குவெர்ஃபா (قرفة) என்று அழைக்கப்படுகிறது.
Remove ads

வரலாறு

Thumb
2005 ஆம் ஆண்டில் இலவங்கப்பட்டையின் (கானிலா) விளைச்சல்
Thumb
கோஹெலரின் மருத்துவ குணம் நிறைந்த செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட சின்னமாமம் வேரம் (1887)
Thumb
உண்மையான இலவங்கப்பட்டை அடிமரப்பட்டை குவியல்கள், அரைக்கப்பட்ட இலவங்கப்பட்டை.

கிருத்துவம்: இலவங்கப்பட்டை குறித்து, முதன்முதலாக வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது. பரிசுத்த பூசை எண்ணெயில் இனிப்பாக இலவங்கப்பட்டையையும், (எபிரேய மொழி קִנָּמוֹן, qinnāmôn) காசியாவையும் இரண்டையுமே பயன்படுத்தும் படி, மோசேக்கு கட்டளையிடப்பட்டது; நீதிமொழிகளில், காதலரின் படுக்கை, வெள்ளைப்போளம், கற்றாழையும், இலவங்கப்பட்டையால் வாசனை யூட்டப்பட்டிருக்கும்; உன்னதப்பாட்டில் (சாலமோனின் பாடலில்) உள்ள ஒரு பாடலில், அவருடைய காதலியின் அழகையும், இலவங்கப்பட்டை வாசனையடிக்கும் அவளுடைய உடைகள் லீலி புஷ்பத்தின் வாசனை போல இருக்கிறது என்று விவரிக்கப்பட்டிருக்கும்.

பண்டைய நாடுகளின் மத்தியில் இது மிகவும் மதிப்பு வாய்ந்ததாக எண்ணப்பட்டது. அதனால் இவற்றை அன்பளிப்பாக, கடவுளுக்கும் அரசர்களுக்கும் அளிக்க உகந்ததாக இருந்தது: மிலிடஸில் உள்ள அப்பொல்லோவின் கோவிலுக்கு இலவங்கப்பட்டையையும், காசியாவையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கல்வெட்டு பதிவுகள் கூறுகின்றன.[5] மத்திய தரைகடல் உலகத்தில், கறிமசால வாணிபத்தில் ஈடுபட்டிருந்த இடைப்பட்ட வாணிபர்கள், விநியோகம் செய்பவர்களாக தங்களுடைய தனி உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக பல நூற்றாண்டுகளாக இதனுடைய மூல பொருட்கள் மர்மமாக வைத்திருந்தனர். இருப்பினும், இலங்கை, இலவங்கப்பட்டை விளைவிக்கப்படும் இடமாக இருக்கிறது. கிமு 2000த்தின் ஆரம்ப காலத்தில், எகிப்திற்கு இது இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இதை குறித்து சொல்பவர்கள், இது சீனாவிலிருந்து வந்தது என்றும், காசியாவுடனும் குழப்பிக்கொள்வதாகவே கூறப்படுகின்றனர்[6] ரோமில் பிணங்களை எரிக்கும் விறகு கட்டையாகவும், மிவும் விலையுயர்ந்ததாகவும் இருந்தது. ஆனால், பேரரசர் நீரோ, தன்னுடைய மனைவி பாப்பாய் சபீனாவின் பிணத்தை எரிப்பதற்கு, நகர விநியோகத்தில் ஒரு வருட விநியோக மதிப்புடைய பட்டைகளை கிபி 65ல் எரித்தார் என்று சொல்லப்படுகிறது.[7]

கெய்ரோ நக அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன்னதாக, அலெக்சாந்திரியா நகரமே, இலவங்கப்பட்டையின் மத்திய தரைக்கடல் கப்பல் வாணிக துறைமுகமாக இருந்தது. கிரேக்க வரலாற்று எழுத்தாளர்களுக்கு இலவங்கப்பட்டை, செங்கடலிருந்து எகிப்தின் வாணிப துறைமுகத்திற்கு வந்தது என்பது தெரியும். ஆனால் அது எத்தியோப்பியாவிலிருந்து வந்ததா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஐரோப்பியர்களுக்கு தெரிந்திருந்த இலத்தின் எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். 1248ல் சியூவர் டீ ஜாயின்வில்லி என்பவர், அவருடைய ராஜாவுடன் எகிப்திற்கு ஒரு அறப்போரில் கலந்துக்கொண்டார். அந்த அறப்போரின் போது, உலகத்தில் முனையில், நைலின் மூலத்தில் வலைகளின் மூலமாக இலவங்கப்பட்டை பிடிக்கப்படுகின்றன என்று அவர் கேள்விப்பட்டதாக கூறினார்.

இடைக்காலங்களின் முடிவு வரைக்கும், இலவங்கப்பட்டை எங்கிருந்து கிடைக்கிறது என்பதற்கான மூல ஆதாரம் மேற்கத்திய உலகத்திற்கு ஒரு மர்மமாகவே இருந்து வந்தது. மார்கோ போலோ, இந்த எண்ணிக்கையின் துல்லியத்தை தவிர்த்தார்.[8] கிரேக்க எழுத்தாளர்களும், மற்ற நூலாசிரியர்களும், இலவங்கப்பட்டை அரேபியாவில் தான் கிடைக்கிறது என்றனர்: மிகப்பெரிய இலவங்கப்பட்டை பறவைகள், இலவங்கப்பட்டை மரங்கள் வளரும் பெயர் தெரியாத இடத்திலிருந்து இலவங்கப்பட்டை குச்சிகளை சேகரித்து வந்து, அதனுடைய கூடுகளை கட்டுவதற்காக அதனை பயன்படுத்துகின்றன; இந்த குச்சிகளை பெறுவதற்காக அரேபியர்கள் ஒரு திட்டத்தை தீட்டினர். 1310ன் கடைசி வரைக்கும், பைசாண்டியத்தில் இந்த கதை நம்பப்பட்டு வந்தது. முதலாம் நூற்றாண்டு வரை இந்த கதை நம்பப்பட்டு வந்தாலும் கூட, ப்லென்னி த எல்டர் என்பவர், வணிகர்கள் இலவங்கப்பட்டையின் விலையை அதிகரிப்பதற்காக இந்த கதையை உருவாக்கினர் என்று எழுதினார். சுமார் 1270ல் சகரியா அல்-குவாஸ்வினியின் அத்தர் அல்-பிலாட் வா-அக்பர் அல்-இபாட்டில் ("இடங்களின் நினைவுச்சின்னங்கள், கடவுளின் அடிமைகளின் வரலாறு") அராபிய வணிகர்கள் தரைவழியாக இந்த மசாலாப் பொருளை எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா பட்டணத்திற்குக் கொண்டு வந்தனர். இங்கு இத்தாலியிருந்து வந்த வெனிஸ் நாட்டு வணிகர்கள் அவைகளை வாங்கினர். இவர்கள் ஐரோப்பாவில் மசாலாப் பொருட்கள் வணிகத்தில் தனி உரிமையை வகித்தார்கள். மற்ற மத்தியதரை சக்திகளான மாம்லுக் சுல்தான்கள் மற்றும் ஓட்டொமன் சாம்ராஜ்ஜியம் ஆகியவை எழும்பினதால் இந்த வணிகம் தடைப்பட்டது. ஆகையால் ஐரோப்பியர்கள் ஆசியாவிற்கு மற்ற வழிகளை பரவலாக தேடுவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாக விளங்கியது.

இந்த கறிமசால பொருள் இலங்கையில் வளர்கிறது என்று முதன் முதலாக சொல்லப்பட்டது.[9] சுமார் 1292ல் வந்த கடிதத்தின் மூலமாக, சிறிது நாள் கழித்து ஜான் ஆஃப் மாண்டேகார்வினோவினால் பின்தொடரப்பட்டது.[10]

இந்தோனேசியாவின் கட்டுமரங்கள் இலவங்கப்பட்டையை (இந்தொனேஷியாவில் காயு மானிஸ் - “இனிப்பான மரம்” என்று நேரடியாக பொருட்கொள்ளலாம்) ஒரு “இலவங்கப்பட்டை வழியில்” நேரடியாக மொலுக்காஸிலிருந்து கிழக்கு ஆஃப்ரிக்காவுக்கு கொண்டு சென்றன. அங்கு உள்ளூர் வியாபாரிகள் அவைகளை வடக்கே ரோமானிய சந்தைக்குக் கொண்டு சென்றனர். இராஃப்டா என்ற வார்த்தையையும் பார்க்கவும்.

போர்ச்சுகீசிய வணிகர்கள், இறுதியாக பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்தனர். அங்கு சிங்கல மக்களின் பாரம்பரிய இலவங்கப்பட்டை உற்பத்திக்கும் மேலாண்மைக்கும் மறு உருவளித்தார்கள். இதனால் இவர்கள் இலங்கையில் இலவங்கப்பட்டைக்கான தனி உரிமையைப் பிற்பாடு கொண்டிருந்தார்கள். போர்ச்சுகல் நாட்டவர்கள் 1518ம் ஆண்டு இந்த தீவில் ஒரு கோட்டையை நிறுவி, நூறு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய சொந்த தனி உரிமையைப் பேணினர்.

இடச்சு வணிகர்கள் இறுதியில் தீவின் உள்பகுதியிலிருந்த கண்டி ஆட்சியருடன் உடன்பட்டு, போர்ச்சுகல் நாட்டின் உரிமையை வீழ்த்தினர். 1638ல் அவர்கள் ஒரு வணிகத் துறையை நிறுவினர், 1640க்குள் தொழிற்சாலைகளைக் கைப்பற்றினர். 1658க்குள் மீதமிருந்த அனைத்து போர்ச்சுகல் நாட்டவரையும் துரத்திவிட்டனர். கிழக்கத்திய தேசங்கள் அனைத்திலும் அவை மிகவும் சிறந்தன: தீவை விட்டு ஒருவர் கடந்து செல்லும் போது, கடலில் எட்டு லீகுகள் (1லீக்-4.8கிமி) சென்றபின்னும், இன்னும் இலவங்கப்பட்டையின் நறுமம் வீசும்” என்று ஒரு டச்சு மாலுமி வியந்தார். (பிராடல் 1984, ப. 215) இடச்சு கிழக்கிந்திய நிறுவனம் வனத்தில் அறுவடை செய்யும் முறைகளை மேம்படுத்துவதோடு, காலபோக்கில் தன்னுடைய சொந்த மரங்களை பயிரிட ஆரம்பித்தது. 1796ல் ஆங்கிலேயர் இடச்சு நாட்டவரிடமிருந்து இலங்கைத்தீவை கைப்பற்றினர்.

1767ல் கிழக்கிந்திய நிறுவனத்தின் ப்ரௌன் பிரபு, கேரள மாவட்டமான கண்னூரில் (தற்போது கண்ணூர்) அஞ்சரக்கண்டிக்கு அருகே அஞ்சரக்கண்டி இலவங்கப்பட்டை பண்ணையை நிறுவினார்.

Remove ads

புறத்தோற்றம்

இலவங்க மரங்கள் 10-15 மீட்டர் (32.8 - 49.2 அடி) உயரமுள்ளவை. இலைகள் முட்டை வடிவத்தில், நீள சதுரமாக இருக்கின்றன, 7 - 18 செ. மீ (2.75-7.1 அங்குலம்) நீளமுள்ளவைகளாக இருக்கின்றன. ஒரு குஞ்சம் வடிவத்தில் இருக்கும் பூக்கள், ஒரே ஒருவகைப் பச்சை நிறத்தைக் கொண்டு, ஒரு தனி வாசனையைக் கொண்டுள்ளன. பழமானது, ஒரே ஒரு ஊதா நிற, 1-செமீ அளவு விதையைக் கொண்ட பெர்ரியாகும்.

இனங்கள்

Thumb
சிலோன் ("உண்மை") இலவங்கப்பட்டை (இடது பக்கதில் இருப்பது சின்னமாமம் சேலானிகம்) மற்றும் அதற்கு பக்கத்தில் இருப்பது இந்தோனேஷிய இலவங்கப்பட்டை (சின்னமாமம் பர்மான்னி) குவில்கள்

உலகில் பரவலாக, பல்வேறு தாவர இனங்கள் இலவங்கப்பட்டை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பல இணையதளங்கள் தங்கள் “இலவங்கப்பட்டையை” காசியா என்று விவரிக்கின்றன.[11] ஒல்லியான உட்புற அடிமரப்பட்டை மட்டும் உபயோகிக்கும் இலங்கை இலவங்கப்பட்டை, நொறுங்கும் அமைப்புடனும், மென்மையாகவும் இருக்கும். இத்தகையப் பட்டை, காசியாவை விட குறைவான வலிமையுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த இலவங்கப்பட்டையை விட, காசியாவிற்கு அதிகமான சுவை, மணம், தோற்றம் கொண்டுள்ளன.[12]

லேசான நச்சுத்தன்மையுடைய பொருளான கியூமாரின் இருக்கும் காரணத்தால், ஐரோப்பிய ஆரோக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் அதிகமான அளவில் காசியா உண்பதற்கு எச்சரிக்கை அளித்துள்ளது.[13] தேவையான எண்ணெய் பொருள் குறைந்த அளவில் இருப்பதனால் சின்னமோம் பர்மான்னியில் இது மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. அதிக அளவுகளில் இருக்கும் போது க்யூமாரின் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையான இலங்கை இலவங்கப்பட்டையில் க்யூமாரின் புறக்கணித்தக்க அளவிலேயே உள்ளது.

முழுமையாக இருக்கும் போது இரண்டு மரப்பட்டைகளையும் சுலபமாக வேறுபடுத்த முடியும். அவற்றின் நுண்ணோக்கி குணாதிசயங்களும், அதிகமாகவே வேறுபாடுகளுடன் இருக்கும். இலவங்கப்பட்டை குச்சிகள், பல மெல்லிய படிவங்களால் ஆனது என்பதால், சிறு அரவை எந்திரம் மூலம் எளிதில் பொடியாக்கி விட முடியும். ஆனால், காசியா குச்சிகள் மிக கடினமானதாக இருக்கும். இந்தோனேசிய காசியா (சின்னமாமம் பர்மான்னி ) அதிகப்படியாக ஒரு அடர்த்தியான படிவமுடைய அழகான இறகுகளாக விற்கப்படுகிறது. இதனை சிறு அரவை இயந்திரத்தால் அரைப்பது எளிதல்ல.

மரப்பட்டை குவில்களாக மடிக்க முடியாத படி இருக்கும் காரணத்தால், சாய்கான் காசியா (சின்னமாமம் லௌரிரோல் ), சீன காசியா (சின்னமாமம் அரோமாடிகம் ) ஆகியவை அடர்த்தியான மரப்பட்டையின் உடைந்த துகள்களாக விற்கப்படுகிறது. தூள் செய்யப்பட்ட நிலையில் காசியாவை பிரித்தறிவது கடினம். தூளாக்கப்பட்ட மரப்பட்டையுடன் சிறிதளவு ஐயோடீனின் டிங்சர் (மாச்சத்துக்கான ஒரு சோதனை) சுத்தமான நல்ல தரமான இலவங்கப்பட்டையில் சேர்க்கப்படும் போது மிகக் குறைவான தாக்கம் காணப்படும், ஆனால், காசியாவில் சேர்த்தால் ஒரு கருநீல நிறம் தோன்றும்.

இலவங்கப்பட்டை சில சமயங்களில் மலபார்தம் (சின்னமாமம் டமாலா ) இனத்தோடும், சாய்கான் இலவங்கப்பட்டை (சின்னமாமம் லௌரிரோல் ) இனத்தோடும் காணும் போது, தோற்றக் குழப்பம் ஏற்பட்டு, எளிமையாக அடையாளம் காண இயலாமல் போகும்.

Remove ads

வேளாண்மை

Thumb
ஒரு காட்டு இலவங்கப்பட்டை மரத்தின் இலைகள்

இலவங்கப்பட்டை பண்டைய காலங்களிலிருந்து இலங்கையில் வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மரம் வணிக அடிப்படையில் தென்னிந்தியாவின் கேரளா, வங்க தேசம் (பங்க்ளாதேஷ்), ஜாவா, சுமத்ரா, மேற்கிந்திய தீவுகள், பிரேஸில், வியட்னாம், மடகாஸ்கர், சான்ஸிபார், எகிப்திலும் வேளாண்மை செய்யப்படுகிறது. இலங்கையின் இலவங்கப்பட்டை மிகவும் மெல்லிய வழுவழுப்பான பட்டையைக் கொண்டுள்ளது. அதின் நிறம் இளஞ்சிவப்பும் பழுப்பு நிறமும் கலந்ததாகவும் மிகவும் வாசனையான நறுமணமுள்ளதாகவும் காணப்படுகிறது.

இலவங்கப்பட்டை மரத்தை இரண்டு வருடங்களுக்கு வளரவிட்டு பிறகு, அவற்றின் கிளைகள் நறுக்கப்பட்டு, பட்டை செழிக்க செய்யப்படுகிறது. இதனால் ஒரு வருடம் கழித்துத் துளிர்கள் வேர்களிலிருந்து எழும்புகின்றன. இந்த துளிர்களிலிருந்து, அவைகளின் பட்டைகள் நீக்கப்பட்டு காயவைக்கப்படுகின்றன. மெல்லிய (0.5 மிமீ) உள்பட்டை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; வெளிப்புற மரப்பகுதி நீக்கப்பட்டு, ஒரு மீட்டர்-நீள இலவங்கப்பட்டை துண்டுகள் காய்ந்து சுருள்களாகின்றன (“குவில்கள்”); ஒவ்வொரு காய்ந்த குவியலும் எண்ணற்ற துளிர்களிலிருந்து உண்டான பல பட்டைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த குவில்கள் விற்பனைக்காக 5-10 செமீ நீளமுள்ளவைகளாக வெட்டப்படுகின்றன.

இலங்கை

2006ன் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற இதழின்படி, இலங்கை உலகத்தின் இலவங்கப்பட்டையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்வதாகவும், இதை தொடர்ந்து சீனா, இந்தியா, வியட்னாம் ஆகியவை உற்பத்தி செய்வதாகவும் அறிவித்தது.[14] FAOவின்படி, இலவங்கப்பட்டையின் காசியா வகையின் உலக உற்பத்தியில் 40% இந்தொனேஷியாவில் உற்பத்தியாவதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை தர அமைப்பு, இலவங்கப்பட்டை இறகுகளை நான்கு வகைகளாக பிரிக்கிறது: • ஆல்பா விட்டத்தில் 6 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது. • கண்டம் சார்ந்தவை விட்டத்தில் 16 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது. • மெக்ஸிகன் விட்டத்தில் 19 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது. • ஹாம்பர்க் விட்டத்தில் 32 மில்லிமீட்டரை விட குறைவாக உள்ளது. இவை, மேலும் குறிப்பிட்ட தரங்களாக பிரிக்கப்பட்டன. இறகுகள் என்பவை, கொப்புகள் மற்றும் முறுக்குள்ள இளங்கதிர்களின் உட்புற பட்டைகளாகும். பிசிர்கள் என்பவை இறகுகளை கத்தரித்தல், பிரிக்க முடியாத வெளிபுற, உட்புற பட்டைகள் அல்லது சிறிய கொப்புகளின் பட்டைகளாகும்.

Remove ads

பயன்கள்

இலவங்கப்படை அதிகமாக கறிமசால் பொருளாகவே சமையலில் பயனாகிறது. குறிப்பாக இது தாளிபுக்கும், மணம் கூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது.

  • மெக்சிகோவின் முக்கிய இறக்குமதியாக அமைந்து, சாக்லெட் தயாரிப்பிலும், பயன்படுத்தப்படுகிறது.[15] ஆப்பிள் பை, டோனட்ஸ், இலவங்கப்பட்டை அப்பம் போன்ற உணவுகளுக்குப் பின் அளிக்கப்படும் இனிப்பு வகைகளிலும், உறப்பு பதார்த்தங்கள், தேனீர், சூடான கோக்கோ, மது பானங்கள் ஆகியவற்றிலும் பயனாகிறது.
  • மத்திய கிழக்கு நாடுகளில் இது கோழி, ஆடு கார உணவுப் பொருட்களில் அதிகப்படியாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • ஐக்கிய அமெரிக்காவில், இலவங்கப்பட்டையும், சர்க்கரையும் அதிகப்படியாக தானியப்பொருட்களில் மணம் சேர்க்க, ரொட்டி சார்ந்த உணவு பதார்த்தங்கள், பழங்கள் குறிப்பாக ஆப்பிள் ஆகியவற்றிலும் சுவையூட்டியாக உள்ளது. இந்த நோக்கங்களுக்காக ஒரு இலவங்கப்பட்டை-சர்க்கரை கலவை கூட தனியாக விற்கப்படுகிறது. ஊறுகாய்களிலும், இலவங்கப்பட்டை உபயோகிக்கப்படலாம்.
  • நேரடியாக உண்ணக் கூடிய ஒரு சில கறிமசால் பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. பெர்சிய சமையல் முறையில் பல காலமாக இலவங்கப்பட்டை பொடி மிக முக்கியமான கறிமப் பொருளாக உள்ளது. இது அடர்த்தியான சூப், பானங்கள், இனிப்புகளில் பயனாகிறது. இது அதிகப்படியாக பன்னீருடனும், மற்ற கறிமசால் பொருளோடும் கலக்கப்பட்டு, ஸ்ட்யூவுக்கான இலவங்கப்பட்டை சார்ந்த குழம்பு பொடி செய்யப்படுகிறது. இனிப்பு பதார்த்தங்களில் மீது, குறிப்பாக ஷோலிசார்ட் பேர்شله زرد தூவப்படுகிறது.

இதன் எண்ணெய் மணம், இதன் உட்பொருட்களில், 0.5 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் வரை உள்ள நறுமணம் மிகுந்தது. அடி மரப்பட்டையை இடித்து, கடல் தண்ணீருடன் கலந்து பின் உடனடியாக வடிகட்டி இந்த எண்ணெய் தயார் செய்யப்படுகிறது. இது தங்க-மஞ்சள் நிறத்திலும், இலவங்கப்பட்டையின் வாசனையுடனும் இருக்கும். இதன் மணம், இதிலுள்ள சின்னமிக் ஆல்டிஹைட் அல்லது சின்னமால்டிஹைடினால் ஏற்படுகிறது. நாளாகும் போது பிராணவாயு ஈர்க்கப்பட்டு, அதன் நிறம் அடர்த்தியாகி, குன்கிலிய சேர்மங்களை உருவாக்குகிறது. இந்த எண்ணெயின் மற்ற திரவ உட்பொருட்களில் அடங்குபவை எத்தில் சின்னமேட், யூஜினால் (இலைகளில் அதிகமாகக் காணப்படுவது), சின்னமால்டிஹைட், பீடா-காரியோஃபிலின், லின்னலூல் மற்றும் மெத்தில் ஷாவிகோல் ஆகியவையும், அடி மரப்பட்டையில் சுமார் 60 சதவீதம் வரை இந்த எண்ணெய் உள்ளதாகக் கூறுகின்றனர்.

மருந்துகளில் இது மற்ற கரையக்கூடிய எண்ணெய்களைப் போல செயல்படுகிறது. ஒரு காலத்தில் இது மனிதனுக்கு ஏற்படும் தடுமனையும் குணப்படுத்துவதாகக் கருதப்பட்டது. இது வயிற்றுப் போக்கு, செரிமா மண்டலத்தின் மற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் உபயோகிக்கப்படுகிறது.[16] ஆக்சிஜன் ஏற்றத் தடுப்பு செயல்பாடு இலவங்கப்பட்டையில் அதிகமாக உள்ளது.[17][18] இலவங்கப்பட்டையில் உள்ள தேவையான எண்ணெய்க்கு நுண்ணுயிர் கொல்லி குணங்களும் உண்டு.[19] இது சில குறிப்பிட்ட உணவுகளை பதப்படுத்தவும் உதவும்.[20]

இன்சுலின் தடுப்பு, சக்கரை நோய் வகை2 ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் இலவங்கப்பட்டைக்கு நல்ல மருந்தியல் தாக்கங்கள் இருப்பதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆய்வில் உபயோகித்த செடி பொருள் அதிகமாக காசியாவில் இருந்து எடுக்கப்பட்டது. அதில் சில மட்டுமே உண்மையாக சின்னமாமம் சேலானிகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. காசியாவின் ஆரோக்கிய பயன்கள் குறித்த தகவல்களுக்காக காசியாவில் மருத்துவ உபயோகங்களைப் பார்க்கவும்.[21] தாவர வேதியியலின் தற்போதைய வளர்ச்சி, சி.சேலானிகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சின்னம்டானின் B1க்கு, சக்கரை நோயில்(வகை2) சிகிச்சை குணங்கள் இருப்பதாக காண்பித்துள்ளது.[22] இலவங்கப்பட்டை பல் வலிக்கு சிகிச்சை அளிக்கவும், துர்நாற்றத்தைப் போக்க பாரம்பரியமாக உபயோகிக்கப்படுகிறது. செரிமானத்திற்கும் பயனாகிறது..[23]

பூச்சி கொல்லியாகக் கூட இலவங்கப்பட்டை உபயோகிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கொசு முட்டைகளை அழிக்க இலவங்கப்பட்டை இலை எண்ணெய் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது.[24] இலவங்கப்பட்டை இலை எண்ணெயில் உள்ள சேர்மங்களான சின்னமாம்டிஹைட், சின்னமைல் அசிடேட், யூஜினால் மற்றும் அனிதோல் ஆகியவற்றிற்கு கொசு முட்டைகளை அழிப்பதில் அதிக தாக்கம் உள்ளதென அறியப்பட்டுள்ளது.

அடிமரப்பட்டையில் இருந்து செய்யப்படும் சின்னமாமம் சேலானிகம் தேநீரை தொடர்ந்து குடிப்பது, செடி பகுதியில் குறிப்பிடத்தக்க பிராணவாயு ஏற்பு எதிர் திறன் இருப்பதால், மனிதர்களில் பிராணவாயு அழுத்தம் சார்ந்த நோய்களில் நல்ல பயனை அளிப்பதாக நம்பப் படுகிறது.

இலவங்கப்பட்டை பாலுணர்ச்சி ஊக்கியாகக் கூட இருக்கலாம்.[25]

Remove ads

இணையத் தொடர்

இலவங்கப்பட்டை சவால் என்ற இணைய தள தொடர் நிகழ்ச்சியில், இலவங்கப்பட்டை பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒருவர், ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டையை நுகராமல், வாந்தி எடுக்காமல் சாப்பிட வேண்டும். இதில், சிலர் மட்டுமே வெற்றி பெற்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியான டோஷ்.ஒ என்பதன் தொகுப்பாளர், இதில் கலந்து கொண்டு தோல்வி அடைந்தார்.[26] மூக்கினால் நுகர்ந்தால் கூட, மிகுந்த வலியையோ, உடல் இன்னலையோ விளைவிக்கக் கூடியது என்பதை அறியாமல், பலர் அறிந்து கொண்டு இதில் கொள்வதில்லை.[27] ஒரு தேக்கரண்டி தூளுக்கு, அதிகப்படியான திரவம் தேவைப்படுகிறது. அப்பொழுது எளிதாக இப்பட்டைத் துகள்கள் எளிதில் மூச்சுக் குழலுக்குள் ஏறி விடுகிறது. இதனால் முதல் கலந்து கொள்ள வந்தவர்கள், பின்னர் பயந்து விலகினர். காற்றுக்குப் பதிலாக, கலந்து கொண்டவரில் பலர் அதிக அளவில் இலவங்கப்பட்டையை மூச்சுக்காற்றாக உள்ளிழுத்து விட்டனர்.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads