இலால் சிந்தாமணி சரண் நாத் சகாதேவ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலால் சிந்தாமணி சரன் நாத் சகாதேவ் (Lal Chintamani Sharan Nath Shahdeo) (14 திசம்பர் 1931 - 10 சூலை 2014), சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியை ( நவீன சார்க்கண்டு ) ஆட்சி செய்த ஒரு பண்டைய இந்திய வம்சத்தின் கடைசி ஆட்சியாளரும் ஓர் அரசியல்வாதியும் ஆவார். [1] [2] [3]
Remove ads
ஆரம்ப ஆண்டுகள்
சகாதேவ் 1931 இல் நாகவன்ஷி வம்சத்தின் அரச குடும்பத்தில் பிறந்தார். ராய்ப்பூரில் உள்ள ராஜ்குமார் கல்லூரியில் படித்தார். 1950ஆம் ஆண்டில், இவர் தனது தாத்தா உதய் பிரதாப் நாத் சகாதேவுக்குப் பிறகு சோட்டா நாக்பூர் ஜமீன்தாரி தோட்டத்தின் மகாராஜாக நியமிக்கப்பட்டார். 1952இல் ஜமீந்தாரி முறை ஒழிக்கப்படும் வரை இவர் அப்பகுதியை ஆண்டு வந்தார். [4]
சட்டமன்ற உறுப்பினர்
1957 இல் ராஞ்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து சுயேட்சியையான சட்டமன்றத்திலிருந்த அவர் பீகார் சட்டமன்றத்தின் இளைய உறுப்பினராவார். பின்னர், இவர் பீகார் சட்டமன்றத்திற்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5] [6]
பணிகள்
இவர் தென்கிழக்கு இரயில்வே வாரியத்தின் உறுப்பினராகவும், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் ஆயுள் செனட்டராகவும், சிறிய அளவிலான தொழில்துறை வாரியத்தின் (பீகார்) தலைவராகவும் இருந்தார். நிலங்களை நன்கொடையாக அளித்து நிதி உதவி வழங்குவதன் மூலம் பல கல்வி, சுகாதாரம் மற்றும் அரசு நிறுவனங்களை நிறுவ இவர் உதவினார். கும்லாவில் உள்ள கார்த்திக் ஓரான் கல்லூரி, ராத்துவில் சிறுமிகளுக்கான மகாராணி பிரேம் மஞ்சரி தேவி கல்லூரி, ராத்துவில் உள்ள ஆதிவாசி பால விகாஸ் வித்யாலயா, ராத்துவில் உள்ள மகாராணி பிரேம் மஞ்சரி தேவி சிறப்பு மருத்துவமனை, ராத்து காவல் நிலையம் ஆகியவை இதில் குறிபிடத்தகவை. [7]
இறப்பு
சிலகாலம் நோய்வாய்பட்டதைத் தொடர்ந்து இவர் 9 சூலை 2014 அன்று ராஞ்சியில் இறந்தார். [8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads