இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு (Lithium aluminium chloride) என்பது LiAlCl4 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இலித்தியத்தின் குளோரோ அலுமினேட்டு உப்பாகும். ஆங்கிலத்தில் இதைச் சுருக்கமாக LAC என்பார்கள்.
தையோனைல் குளோரைடில் இடப்பட்ட இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு கரைசல் நீர்மநிலை எதிர்மின் முனையாகவும் சில மின்கலன்களில் மின்பகுளியாகவும் பயன்படுகிறது. உதாரணம் இலித்தியம் – தையோனைல் குளோரைடு மின்கலன். இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டுடன் தையோனைல் குளோரைடு, கந்தக டைஆக்சைடு மற்றும் புரோமின் சேர்த்து மற்றொரு வகையான எதிர்மின் முனை – மின்பகுளி மின்கலன் உருவாக்கப்படுகிறது.
இலித்தியம் புரோமைடு, இலித்தியம் பெர்குளோரேட்டு, இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு மற்றும் இலித்தியம் அறுபுளோரோபாசுப்பேட்டு முதலிய சேர்மங்களும் இலித்தியம் மின்கல மின்பகுளிகளாகப் பயன்படும் மற்ற இலித்தியம் உப்புகளாகும். இலித்தியம் குளோரைடு, இலித்தியம் அயோடைடு, இலித்தியம் குளோரேட்டு, இலித்தியம் நைட்ரேட்டு, இலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு, இலித்தியம் அறுபுளோரோ சிலிக்கேட், இலித்தியம் பிசுயிமைடு அல்லது முப்புளோரோ மீத்தேன்சல்பனைல் மற்றும் முப்புளோரோ மீத்தேன்சல்போனேட்டு முதலியன பொதுவாகப் பயன்படும் இலித்தியம் சேர்மங்களாகும்.[2]
Remove ads
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads