இலித்தியம் நைட்ரேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

இலித்தியம் நைட்ரேட்டு
Remove ads

இலித்தியம் நைட்ரேட்டு (Lithium nitrate) என்பது LiNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நைட்ரிக் அமிலத்தின் இலித்தியம் உப்பான இச்சேர்மம் ஒரு கார உலோக நைட்ரேட்டு உப்பாக வகைப்படுத்தப்படுகிறது. ஈரம் உறிஞ்சியாகத் திகழும் இவ்வுப்பு நீரை உறிஞ்சி இலித்தியம் நைட்ரேட்டு முந்நீரேற்று என்ற நீரேற்றாக உருவாகிறது. இதன் ஈருறுப்புச் சேர்மங்கள் வெப்ப பரிமாற்று பாய்மங்களுக்காக ஆராயப்படுகின்றன.[1]

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...

நைட்ரிக் அமிலத்துடன் இலித்தியம் கார்பனேட்டு அல்லது இலித்தியம் ஐதராக்சைடு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதால் இலித்தியம் நைட்ரேட்டு உருவாகிறது.

Remove ads

பயன்கள்

நிறமற்ற ஈரமுறிஞ்சும் இலித்தியம் நைட்ரேட்டு உப்பு சிவப்பு நிற பட்டாசு மற்றும் வெடிபொருள்கள் தயாரிப்பில் ஓர் ஆக்சிசனேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.

நீரேற்றப்பட்ட வடிவமான இலித்தியம் நைட்ரேட் முந்நீரேற்று 287±7 யூல்/கி இணைவின் மிக உயர்ந்த தன்வெப்பத்தைக் கொண்டுள்ளது, எனவே இதன் உருகும் வெப்பநிலையான 303.3 கெல்வினில் வெப்ப ஆற்றல் சேமிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

சமையலுக்கு சூரியனில் இருந்து சேகரிக்கப்படும் வெப்பத்தை சமையலுக்குப் பயன்படுத்த சேமிக்கும் ஒரு ஊடகமாக இலித்தியம் நைட்ரேட்டு முன்மொழியப்பட்டுள்ளது. பிரெசுனல் விலையைப் பயன்படுத்தி திண்மநிலை இலித்தியம் நைட்ரேட்டை உருக்கி பின்னர் இது ஒரு "சூரிய மின்கலமாக" செயல்படுத்தப்படுகிறது. வெப்பச்சலனம் மூலம் வெப்பத்தை மறுபகிர்வு செய்ய இவ்வமைப்பு அனுமதிக்கிறது.[4]

Remove ads

தயாரிப்பு

நைட்ரிக் அமிலம் மற்றும் இலித்தியம் கார்பனேட்டை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இலித்தியம் நைட்ரேட்டை தயாரிக்க முடியும்.

Li2CO3 + 2 HNO3 → 2 LiNO3 + H2O + CO2

பொதுவாக LiNO3 சேர்மத்தை உருவாக்கும் போது, அமிலம் அனைத்தும் எப்போது நடுநிலையாக்கப்பட்டது என்பதை அறிய காடிகாரத்தனமை சுட்டெண் காட்டி பயன்படுத்தப்படுகிறது.[5] இருப்பினும், இந்த நடுநிலையாக்கத்தை கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி இழப்புடன் ஒப்பிட்டு கண்டறியலாம். அதிகப்படியான நீரின் இருப்பை அகற்ற விளைபொருளை சூடாக்கலாம்.

Remove ads

நச்சுத்தன்மை

இலித்தியம் நைட்ரேட்டு உட்கொள்வதால் மத்திய நரம்பு மண்டலம், தைராய்டு, சிறுநீரகங்கள் மற்றும் இருதய-நாள அமைப்பு ஆகியவற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.[6] தோல், கண்கள் மற்றும் சளி சவ்வுகளுக்கு வெளிப்படும் போது, இலித்தியம் நைட்ரேட்டு எரிச்சலை ஏற்படுத்தும்.[7]

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads