இளம் இந்தியர் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபிநவ பாரத சங்கம் (Abhinav Bharat Society), இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இளைநர்களைக் கொண்ட இரகசியமாக இயங்கிய இந்த சங்கத்தை நாசிக் நகரத்தில், 1904-ஆம் ஆண்டில் நிறுவியவர்கள் விநாயக் தாமோதர் சாவர்க்கரும் மற்றும் அவரது அண்ணன் கணேஷ் தாமோதர் சாவர்க்கர் ஆவார்.[1]
விநாயக் தாமோதர் சாவர்க்கர் புனே நகரத்தில் உள்ள பெர்க்குசன் கல்லூரியில் படிக்கும் போது, நாசிக் நகரத்தில், இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டி நண்பர் குழாம் எனும் பெயரில் இளைஞர்கள் கொண்ட இரகசியச் சங்கத்தினை நிறுவினார். இந்த இரகசிய சங்கம், பல்வேறு பகுதிகளில் கிளைகளைக் கொண்ட பல நூறு புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை உள்ளடக்கியதாக வளர்ந்தது. சாவர்க்கர் சட்டப்படிப்பு சட்டம் படிக்கச் இலண்டன் சென்ற பிறகும், இலண்டன் நகரத்தில் இந்திய இல்லத்தை மையமாகக் கொண்டு இந்த இரகசிய சங்கம் வளர்ந்தது. இந்த இரகசியச் சங்கம் கடும் போக்கு கொண்ட பிரித்தானிய இந்தியாவின் சில அதிகாரிகளை படுகொலை செய்தது. அதன் பிறகு சாவர்க்கர் சகோதரர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய விடுதலைக்குப் பிறகு இச்சங்கம் 1952-ஆம் ஆண்டில் முறையாக கலைக்கப்பட்டது.[2][3]
Remove ads
செயல்பாடுகள்
1 சூலை 1909 அன்று மாலை, இளம் இந்தியர் சங்கத்தின் உறுப்பினரான மதன்லால் திங்கரா எனும் இளைஞர் இந்திய அரசின் செயலாளரின் அரசியல் உதவியாளரான லெப்டினண்ட் கர்னல் வில்லியம் கர்சன்-வில்லியை படுகொலை செய்தார். பின்னர் மதன்லால் திங்ரா கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் தூக்கிலிடப்பட்டார். நாசிக் மாவட்ட ஆட்சியரான எம். டி. ஜாக்சனை, இந்த சங்கத்தின் உறுப்பினரான அனந்த் இலக்குமணன் கன்ஹாரே என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.[4][5]
ஜாக்சன் படுகொலை தொடர்பான விசாரணையில் அபிநவ பாரத் சகம் தொடர்பில் இருந்ததும், அதை வழிநடத்தியதில் சாவர்க்கர் சகோதரர்களின் பங்கும் தெரியவந்தது. விநாயக் சாவர்க்கர் 20 கைத்துப்பாக்கிகளை இலண்டனிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒன்று ஜாக்சன் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டது. ஜாக்சன் கொலையில் வீர சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தண்டனை விதிக்கப்பட்டது. சாவர்க்கர் 1910 இல் அந்தமானில் உள்ள சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஊசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads