இலக்கு (துடுப்பாட்டம்)
துடுப்பாட்டத்திற்குத் தேவைப்படும் கருவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலக்கு (Wicket) என்பது துடுப்பாட்டத்திற்குத் தேவைப்படும் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு மட்டையாளரை ஆட்டமிழப்பு செய்யப் பயன்படுகிறது. இது வீசுகளத்தின் இரு முனைகளில் உள்ள எல்லைக்கோடுகளில் அமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக இலக்குக்கு அருகில் நிற்கும் மட்டையாடுபவர், தன்னை நோக்கி வீசப்படும் பந்து இலக்கில் படாதவாறு மட்டையால் தடுப்பார். மேலும் பந்தை களத்தில் அடித்துவிட்டு ஓட்டங்கள் எடுக்கவும் முயற்சிப்பார்.
Remove ads
குச்சிகளும் மரத்துண்டுகளும்
ஒரு இலக்கு என்பது மூன்று குச்சிகள் மற்றும் இரு இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்படும். இதன் அளவுகள் மற்றும் அமைக்கும் முறை குறித்து விளக்கும் துடுப்பாட்ட விதி 8 பின்வருமாறு:
இலக்கு என்பது 28 அங்குலங்கள் உயரமுள்ள மூன்று மரக்குச்சிகளைக் கொண்டது. வீசுகளத்தின் முனையில் ஒவ்வொரு குச்சியும் 9 அங்குல இடைவெளிகளில் சமமாக நடப்படும். குச்சிகளின் உச்சியில் உள்ள பள்ளங்களின் மேல் எவ்வித பிடிமானமும் இன்றி இரு இணைப்பான்கள் வைக்கப்படும். குச்சிகளுக்கு மேல் 0.5 அங்குலங்கள் நீளத்தைத் தாண்டி மரத்துண்டுகள் இருக்கக்கூடாது. மேலும் மரத்துண்டுகளின் அளவு 4.31 அங்குலங்களாக இருக்க வேண்டும்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads