ஈசான அரச மரபு
இந்தோனீசியாவிலுள்ள சாவகத்தீவில் ஆட்சி செய்த மாதரம் இராச்சியத்தின் இந்து வம்சம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈசான அரச மரபு (ஆங்கிலம்: Ishana dynasty; சமசுகிருதம்: ईशान; இந்தோனேசியம்: Isyana) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவில் ஆட்சி செய்த மாதரம் இராச்சியத்தின் இந்து ஆட்சியாளர்களின் மரபுவழியைக் குறிப்பிடுவதாகும். இந்த மரபுவழி சஞ்சய மரபுவழியைத் தொடர்ந்து, பொச. 929-ஆம் ஆண்டில் மத்திய ஜாவாவில் இருந்து கிழக்கு ஜாவாவிற்கு மாதரம் இராச்சியத்தின் தலைநகரை மாற்றிய மாபூ சிந்தோக் என்பவரால் நிறுவப்பட்டது.
வரலாற்றாளர் கோடெஸ் கூறுகிறார், "சிந்தோக், தனது ஆட்சியின் பெயரான சிறீ ஈசான விக்ரமதர்மதுங்கதேவன் (Sri Isyana Vikramadharmatungadeva), ஜாவா தீவின் கிழக்கில் சாவக சக்தியின் நிறுவனராக எப்போதும் கருதப்பட்டார்" என்கிறார். மாபூ சிந்தோக்க்கின் மகளும் வாரிசுமான ஈசானதுங்கவிஜயா (Isanatungavijaya), அவருக்குப் பின் அவரது மகன் மகுடவம்சவர்தனும் (Makutavamsavardhana), அதைத் தொடர்ந்து தர்மவங்சன் (Dharmawangsa) என்பவரும் பதவியேற்றனர்.
Remove ads
பொது
1016-1017இல் சிறீவிஜயப் பேரரசு தலைநகரைத் தாக்கி அழித்தபோது ஈசான மரபு வழியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. [1] :128–130
இறுதியில், ஆட்சியாளர் ஏர்லங்கா இராச்சியத்தை மீட்டெடுத்து, காகுரிப்பான் இராச்சியம் என பெயரிட்டு மீண்டும் இணைத்தார். ஏர்லங்காவின் வாரிசுகள் இராச்சியத்தை ஆட்சி செய்தனர். மேலும் இவர்கள் ஈசான மரபுவழியின் தொடர்ச்சி என கருதப்படுகிறார்கள்.
மேலும் காண்க
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads