மாதரம் இராச்சியம்
பண்டைய வம்சம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதரம் இராச்சியம் (Mataram Kingdom) [2] [3] என்பது பொ.ச. 8 -11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவில் செழித்தோங்கிய ஒரு இந்து - பௌத்த இராச்சியமாகும். இது நடுச் சாவகத்திலும் பின்னர் கிழக்கு சாவகத்திலும் அமைந்திருந்தது. சஞ்சயன் என்ற மன்னனால் நிறுவப்பட்ட இந்த இராச்சியத்தை சைலேந்திர வம்சமும், ஈசான வம்சமும் ஆட்சி செய்தன .
அதன் வரலாற்றின் பெரும்பகுதியின் போது, இராச்சியம் விவசாயத்தை, குறிப்பாக விரிவான நெல் விவசாயத்தை பெரிதும் நம்பியிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பின்னர் கடல் வணிகத்திலும் பயனடைந்தது.
வெளிநாட்டு ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின்படி, இராச்சியம் அதிகளவில் மக்கள்தொகை கொண்டதாகவும், மிகவும் செழிப்பானதாகவும் இருந்ததாகத் தெரிகிறது. இராச்சியம் ஒரு பலதரபட்ட சமுதாயத்தை உருவாக்கியது.[4] நன்கு வளர்ந்த கலாச்சாரம் இருந்தது. மேலும் நுட்பமான மற்றும் செம்மையான நாகரீகத்தை அடைந்தது.
Remove ads
பொது

பொ.ச. 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில், இராச்சியம் பாரம்பரிய சாவகக் கலை மற்றும் கட்டிடக்கலையின் மலர்ச்சியைக் கண்டது. இது கோயில் கட்டுமானத்தின் விரைவான வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது. மாதரத்தில் அதன் மையப்பகுதியின் நிலப்பரப்பில் பல கோயில்கள் அமைந்திருந்தன.
கலாசான் கோயில், செவு கோயில் , பிரம்பானான் கோயில் , போரோபுதூர் கோயில், பிரம்பானான் கோயில் போன்றவை மாதரத்தில் கட்டப்பட்ட கோவில்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை அனைத்தும் இன்றைய யோக்யகர்த்தா நகருக்கு மிக அருகில் உள்ளன. [5]
இந்தியமயமாக்கப்பட்ட இராச்சியங்கள்
அதன் உச்சத்தில், இராச்சியம் ஒரு மேலாதிக்கப் பேரரசாக மாறியது - சாவகத்தில் மட்டுமல்ல, சுமாத்ரா, பாலி, தெற்கு தாய்லாந்து, பிலிப்பீன்சின் இந்தியமயமாக்கப்பட்ட இராச்சியங்கள் , கம்போடியாவில் கெமர் பேரரசு போன்றவை. [6] [7] [8]
பின்னர் வம்சம் மத ஆதரவால் பௌத்த மற்றும் சைவத்துவ வம்சங்கள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் ஏற்பட்டதையடுத்து மாதரம் இராச்சியம் இரகாய் பிகாடன் தலைமையிலான சாவகத்தின் மாதரம் இராச்சியத்தின் சைவத்துவ வம்சம் என்றும் பாலபுத்ரதேவன் தலைமையிலான சுமாத்ராவின் சிறீவிஜய இராச்சியத்தின் பௌத்த வம்சம் எனவும் இரண்டு சக்திவாய்ந்த இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது.
சைலேந்திர குலத்தினர்
பொ.ச.1016ஆம் ஆண்டு சிறீவிஜயத்தை தளமாகக் கொண்ட சைலேந்திர குலத்தினர் மாதரம் சாம்ராச்சியத்தின் அடிமையான வுராவாரியால் கிளர்ச்சியைத் தூண்டி, கிழக்கு சாவகத்திலுள்ள வடுகலுவின் தலைநகரைக் கொள்ளையடிக்கும் வரை அவர்களுக்கு இடையேயான பகை முடிவுக்கு வரவில்லை.
சிறீவிஜய பிராந்தியத்தில் மறுக்கமுடியாத மேலாதிக்கப் பேரரசாக உயர்ந்தது. சைவத்துவ வம்சம் தப்பிப்பிழைத்தது. பொ.ச. 1019-இல் கிழக்கு சாவகத்தை மீட்டெடுத்தது. பின்னர் பாலியின் உதயணனின் மகன் ஏர்லாங்கா தலைமையில் ககுரிபன் இராச்சியம் நிறுவப்பட்டது.
Remove ads
வரலாறு

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யோகியாக்கார்த்தா மற்றும் நடு சாவகத்தில் உள்ள கேது மற்றும் கெவு சமவெளிகளின் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய போரோபுதூர், செவு மற்றும் பிரம்பானான் கோயில் போன்ற பல பெரிய நினைவுச்சின்னங்களின் இடிபாடுகளின் கண்டுபிடிப்பு, காலனித்துவ டச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் சில வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது.[9]
இது இந்த பண்டைய நாகரிகத்தின் வரலாற்றை வெளிக்கொணர தொல்லியல் ஆய்வுகளை தூண்டியது.

உருவாக்கமும் வளர்ச்சியும்

மாதரம் இராச்சியத்தின் ஆரம்பக் கணக்கு பொ.ச. 732 தேதியிட்ட காங்கல் கல்வெட்டில் கணப்பட்டது. இது மகலாங் நகரத்தின் தென்மேற்கில் உள்ள காங்கால் கிராமத்தில் உள்ள குனுங் வுக்கிர் கோயிலின் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
பல்லவ எழுத்துக்களைப் பயன்படுத்தி சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டு, குஞ்சரகுஞ்சா பகுதியில் உள்ள மலையில் தங்கத்தாலான ஒரு இலிங்கம் ( சிவனின் சின்னம்) நிறுவப்பட்டதைக் கூறுகிறது. இது யவத்வீபம் ( சாவகம்) என்ற உன்னத தீவில் அமைந்துள்ளது. இலிங்கம் இரகாய் மாதரம் சங் ரது சஞ்சயன் (மாதரத்தின் மன்னர் சஞ்சய இரகாய் (ஆண்டவர்)) உத்தரவின் கீழ் நிறுவப்பட்டது.
சன்னா மன்னன்
இந்த கல்வெட்டு, யவத்வீபத்தை சன்னா என்ற மன்னன் ஆட்சி செய்ததாக கூறுகிறது. அவருடைய நீண்ட ஆட்சி ஞானம் மற்றும் நல்லொழுக்கத்தால் குறிக்கப்பட்டது. சன்னாவின் மரணத்திற்குப் பிறகு, இராச்சியம் பிளவுபட்டது. சன்னகாவின் ( சன்னாவின் சகோதரி) மகன் சஞ்சயன் அரியணை ஏறினார். அவர் சுற்றியுள்ள பகுதிகளை வென்று தனது இராச்சியத்தை விருவுடத்தினார். மேலும் அவரது புத்திசாலித்தனமான ஆட்சியில் தனது குடிமக்கள் அனைவரையும் அமைதி மற்றும் செழிப்புடன் இருக்கவைத்தார்.[10][11] :87
சுமார் 717 பொ.ச.வில் சஞ்சயன் ஆட்சிக்கு வந்திருக்கலாம். 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்சா மன்னனின் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்ட சஞ்சய சரித்திரத்தின் தொடக்க ஆண்டு இது. [12] காங்கல் கல்வெட்டு படி, சஞ்சயன் தெற்கு நடு சாவகத்தில் ஒரு புதிய இராச்சியத்தை நிறுவினார். மேலும் இது சஞ்சயனின் மாமா அரசன் சன்னாவால் ஆளப்பட்ட முந்தைய அரசாட்சியின் தொடர்ச்சியாகத் தெரிகிறது.
இந்த முந்தைய அரசியல் நடு சாவகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தியெங் பீடபூமியில் உள்ள முந்தைய கோயில் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது நடு சாவகத்தில் காணப்படும் மிகப் பழமையான கட்டமைப்பாகும். மாதரம் இராச்சியத்தின் முன்னோடியாக இணைக்கப்பட்ட முந்தைய இராச்சியம் நடு சாவகத்தின் வடக்கு கடற்கரையில் எங்காவது அமைந்திருந்த கலிங்கமாகும் .
பொற்காலம்

மன்னன் பனங்கரன் ஆட்சிக்கும் பாலிதுங் மன்னனுக்கும் இடைப்பட்ட காலம் (760 மற்றும் 910 க்கு இடைப்பட்ட காலம்) சுமார் 150 ஆண்டுகள் நீடித்தது.
இது சாவகத்தின் உன்னதமான நாகரிகத்தின் உச்சகட்டத்தைக் குறித்தது. இந்த காலகட்டம் சாவக கலை மற்றும் கட்டிடக்கலையின் மலர்ச்சிக்கு சாட்சியாக இருந்தது. ஏனெனில் பல கம்பீரமான கோவில்களும் நினைவுச்சின்னங்களும் அமைக்கப்பட்டன.
செவு கோயில்
மேலும், கேது மற்றும் கெவு சமவெளியில் ஆதிக்கம் செலுத்தியது. செவு, போரோபுதூர் மற்றும் பிரம்பானான் கோயில் போன்ற கோயில்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இதில் சைலேந்திரர்கள் அதிகளவில் கோவில் கட்டுபவர்களாக அறியப்பட்டனர்.[13] :89–90
மன்னன் சஞ்சயன் சைவன், அதே சமயம் இவரது வாரிசான பனங்கரன் ஒரு மகாயான பௌத்தர். இந்த நம்பிக்கையின் மாற்றம், சிவவாத சஞ்சயனிலிருந்து பௌத்த பனங்கரன் வரை அறிஞர்கள் மத்தியில் பிரச்சனைக்குரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. நடு சாவகத்தின் அரசியல் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்த இரண்டு அரச குடும்பங்கள் போட்டியிட்டாலும், அவை ஒவ்வொன்றும் சிவவாத இந்து அல்லது மகாயான பௌத்தத்தின் புரவலர்களாக இருந்தனர்.
கட்டுமானங்கள்

பனங்கரன் (ஆட்சி. 760-780) ஒரு உற்சாகமான கட்டிடக்கலை ஆர்வரலாவார். இவர் தனது ஆட்சியின் போது நடத்தப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட குறைந்தபட்சம் ஐந்து பெரிய கோயில் திட்டங்களுக்கு பெருமை சேர்த்தார்.
778 தேதியிட்ட மற்றும் சமசுகிருதத்தில் பிரணகரி எழுத்தில் எழுதப்பட்ட கலாசான் கல்வெட்டின் படி, கலாசான் கோயில் 'குரு சங் ராஜா சைலேந்திரவம்சதிலக' (சைலேந்திர குடும்பத்தின் ஆபரணத்தின் ஆசிரியர்) என்பவரின் விருப்பத்தால் கட்டப்பட்டது. அவர் பனங்கரனை (சஞ்சயனின் வாரிசு) இதனைக் கட்ட வற்புறுத்தினார்.
போதிசத்வதேவி
தேவி (போதிசத்வதேவி) தாராவிற்கு ஒரு புனித கட்டிடமும் சைலேந்திர சாம்ராச்சியத்தில் இருந்து புத்த துறவிகளுக்கு ஒரு புத்த விகாரமும் கட்டப்பட்டது. பனங்கரன் கலாசா கிராமத்தை ஒரு சங்கத்திற்கு வழங்கினார் [14]
இந்தக் கல்வெட்டுடன் இணைக்கப்பட்ட கோயில் தாராவின் உருவத்தை வைத்திருந்த கலாசான் கோயிலும், யோக்யகர்த்தா அருகிலுள்ள சரி கோயிலும் மடமாக செயல்பட்டிருக்கலாம்.

249 கட்டமைப்புகள்
பொ.ச.792 தேதியிட்ட மஞ்சுசிறீகிரஹா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மன்னன் பனங்கரன் பிரமாண்டமான மஞ்சுசிறீகிரஹா கோயிலைக் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தார். எவ்வாறாயினும், 792-இல் முடிக்கப்பட்ட இந்த பிரமாண்டமான கோயில் வளாகத்தின் நிறைவை மன்னர் ஒருபோதும் பார்க்கவில்லை.
784இல் அவர் இறந்த நீண்ட காலத்திற்குப் பிறகே கோயில் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 249 கட்டமைப்புகளைக் கொண்ட இந்த பிரமாண்டமான கோயில் வளாகம் அதன் காலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்தது. மேலும் முக்கியமான அரசாங்கத்தின் மதச் சடங்குகளை நடத்தும் அதிகாரப்பூர்வ அரச கோயிலாக இருக்கலாம்.
மாபெரும் வெற்றியாளர்
சாவகத்தின் கடற்கொள்ளையர்கள் 767-இல் திரான்நாம் மீதும், 774, 787 ஆகிய ஆண்டுகளில் சம்பா மீதும்[15] படையெடுத்ததாக சில தகவல்கள் உள்ளன. பனங்கரனின் வாரிசு தரணிந்திரன் (ஆட்சி. 780–800) அல்லது பொதுவாக மன்னர் இந்திரன் என்று அழைக்கப்பட்டார். அவர் கேலூராக் கல்வெட்டில் ( 782 தேதியிட்டது) அவரது முறையான ஆட்சிப் பெயரான 'சிறீ சங்கிராம தனஞ்சயன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வைரிவரவீரமர்தனன்
இந்த கல்வெட்டில், அவர் 'வைரிவரவீரமர்தனன்' (அதாவது "தைரியமாக எதிரிகளைக் கொன்றவர்") என்று போற்றப்பட்டுள்ளார். தெற்கு தாய்லாந்து மலாய் தீபகற்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலிகோர் பி கல்வெட்டிலும் இதே போன்ற தலைப்பு காணப்படுகிறது. 'சர்வ்வாரிமடவிமதன', இது அதே நபரைக் குறிப்பிடுவதாகக் கூறுகிறது.
மலாய் தீபகற்பத்தில் உள்ள இலிகோரில் சைலேந்திரர்களின் கட்டுப்பாட்டை கொண்டு வந்ததால், தரணிந்திரன் ஒரு துணிச்சலான மற்றும் போர்க்குணமிக்க மன்னனாகத் தெரிகிறது.
மஞ்சுசிறீகிரகா கோயில்
மன்னன் இந்திரன் தனது முன்னோடிகளின் கட்டுமானப் பாரம்பரியத்தைத் தொடர்ந்ததாகத் தெரிகிறது. அவர் மஞ்சுசிறீகிரகா கோயிலின் ( செவு வளாகம்) கட்டுமானத்தைத் தொடர்ந்தார். மேலும் கரங்தெங்கா கல்வெட்டின் படி ( 824 தேதியிடப்பட்டது ) வேணுவானா கோயிலின் கட்டுமானப் பொறுப்பை மெண்டுத்து அல்லது அநேகமாக ஙவென் கோயிலுடன் இணைக்கிறார்.
போரோபுதூர் மற்றும் பாவோன் கோயிலின் திட்டத்திற்கும் தொடக்கத்திற்கும் இவர் காரணமாக இருக்கலாம்.
Remove ads
சான்றுகள்
உசாத்துணை
- Soekmono, R, Drs., Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Penerbit Kanisius, Yogyakarta, 1973, 5th reprint edition in 1988.
- Triastanti, Ani. Perdagangan Internasional pada Masa Jawa Kuno; Tinjauan Terhadap Data Tertulis Abad X-XII. Essay of Faculty of Cultural Studies. Gadjah Mada University of Yogyakarta, 2007.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads