ஈசா வாஸ்ய உபநிடதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈசா வாஸ்ய உபநிடதம் (Isha Upanishad) சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ளது. இந்த உலகங்கள் அனைத்தும் ஈச்வரனால் நிரம்பப் பெற்றுள்ளது என்று துவங்குவதால் (ஈசா வாஸ்ய இதம் சர்வம்), இந்த உபநிடதத்தினை ஈசா வாஸ்ய உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுபநிடதம் 18 மந்திரங்களை மட்டுமே கொண்டுள்ள சிறிய உபநிடதமாகும். இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர், மற்றும் மத்வர் விளக்க உரை எழுதி உள்ளனர்.[1][2]
Remove ads
உபநிடதத்தின் சாந்தி மந்திரமும் விளக்கமும்
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||
ஈச்வரன் பூரண வடிவானவர். சீவனும் பூரண வடிவானது. பூரணமான ஈச்வரனிடமிருந்து பூரணமான சீவன் தோன்றியுள்ளது. பூரணமான சீவனுடைய பூர்ண வடிவத்தை எடுத்துவிட்டால் எஞ்சி இருப்பது பூரணம் மட்டுமே. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
உபநிடதத்தின் மையக்கருத்து
அனைத்து உயிரினங்களும் அண்டங்களும் இறைவனால் நிரம்பப்பட்டுள்ளது. தியாகத்தால் தன்னை காத்துக் கொள்ள வேண்டும். யாருடைய பொருள்களை கைப்பற்ற ஆசை கொள்ளக் கூடாது. எல்லா உயிரினங்களிலும் ஆத்மதத்துவத்தை பார்க்கின்றவனுக்கு மயக்கம் இல்லை, துயரம் இல்லை. வேதத்தில் கூறப்பட்ட கர்ம யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு பலனாக சொர்க்கலோகம், பிதுர்லோகம் கிடைக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட பக்தி யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு அதைவிட சற்று மேலான உலகங்கள் கிடைக்கின்றன. கர்ம யோகத்துடன், பக்தி யோகத்தையும் சேர்ந்து செய்பவர்களுக்கு பிரம்மலோகம் கிடைக்கிறது. மேற்படி உலகங்கள் நிலையற்றதாக இருந்த போதிலும், துயரமிக்க வாழ்வில் அடையப்படும் உயர்ந்த பலனாக கருதப்படுகிறது. கர்ம யோகம் மற்றும் பக்தி யோகத்துடன் “மெய்ப்பொருள் அறிவான ஞான யோகம் என்ற வேதாந்தத்தை தகுதியான குருவின் மூலம் கேட்டு அறிந்து கொண்டவனுக்கு பிறப்பு, இறப்பு இல்லாத மேலான பெருவாழ்வான விதேக முக்தி கிடைப்பது உறுதி.
Remove ads
மேற்கோள்கள்
ஆதாரநூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
