ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரான்-பாக்கித்தான்-இந்தியா எரிவாயு குழாய்த்தொடர் அல்லது அமைதி குழாய்த்தொடர் என்பது ஈரானிலிருந்து பாக்கித்தான் வழியாக இந்தியா வரை இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்லும் குழாய்த்தொடராகும்.
Remove ads
ஈரான் மற்றும் பாக்கித்தான் நாடுகள் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை 1994ல் தொடங்கின[1] இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 1995ல் இருநாடுகளும் ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி தெற்கு பார்சு எரிவாயு வயலிருந்து பாக்கித்தானின் கராச்சி நகருக்கு குழாய்த்தொடர் அமைப்பது குறிந்து ஆராயப்பட்டன. பின்பு ஈரான் பாக்கித்தானிலிருந்து இந்தியாவரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தது. 1999 பெப்ரவரியில் ஈரானுக்கும் இந்தியாவிற்கும் முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.[2]
2007 பெப்ரவரியில், இந்தியாவும் பாக்கித்தானும் ஈரானுக்கு US$4.93 per million British thermal units (US$4.67/GJ) தர ஒப்பந்தம் செய்தன. ஆனால் விலை மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்தன.[3]
ஏப்ரல் 2008ல் சீன மக்கள் குடியரசும் இத்திட்டத்தில் பங்குபெற ஈரான் விரும்பியது.[4] ஆகஸ்டு 2010ல் பங்களாதேசும் கலந்துகொள்ள ஈரான் அழைப்புவிடுத்தது.[5]
2008ல் ஐக்கிய அமெரிக்காவுடன் குடிசார் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து 2009ல் விலை மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கூறி (குழாய்த்தொடர்) இத்திட்டத்திலிருந்து இந்தியா பின்வாங்கியது.[6][7] எனினும், மார்ச்சு 2010ல் பாக்கித்தானும் ஈரானும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா அழைத்தது. அது மே 2010ல் தெஹ்ரானில் நடந்தது.[8]
சனவரி 2010ல் பாக்கித்தான் இத்திட்டத்தை கைவிட அமெரிக்கா வலியுறுத்தியது. இத்திட்டத்தை அந்நாடு கைவிடும்பட்சத்தில் பாக்கித்தானில் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கவும், ஆப்கானித்தான் வழியாக தஜிகிஸ்தானிலிருந்து மின்சாரம் பெற்றுத்தரவும் உதவி புரிவதாக தெரிவித்தது.[9] எனினும், இதனை பாக்கித்தான் பொருட்படுத்தாமல் ஈரானும் பாக்கித்தானும் எரிவாயு குழாய்த்தொடர் அமைக்க மார்ச்சு 16, 2010ல் அங்காராவில் கையெழுத்திட்டன.[6] சூலை 2011ல் கட்டுமானப் பகுதி நிறைவடைந்துள்ளதாக ஈரான் அறிவித்தது.[10]
Remove ads
இதனையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads