ஈழச்சேரி ராமச்சந்திரன்
இந்திய எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈழச்சேரி ராமச்சந்திரன் (Ezhacherry Ramachandran) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலையாளக் கவிஞராவார். திரைப்பட பாடலாசிரியராகவும் பத்திரிகையாளராகவும் [1] இவர் மலையாள இலக்கிய உலகில் இயங்கி வருகிறார். பல மலையாளத் திரைப்படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகளுக்கு ராமச்சந்திரன் பாடல்கள் எழுதியுள்ளார்.[2] 2020 ஆம் ஆண்டு இவருக்கு வயலார் விருது வழங்கப்பட்டது.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
ராமச்சந்திரன் கேரளாவின் பாலா அருகே உள்ள ஈழச்சேரியில் பிறந்தார். எதநாடு எசு.வி.என்.எசு.எசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். தேசபிமானி வார இதழின் தலைமை ஆசிரியராக இருந்தார். தொழில்முறை நாடகங்களுக்கான சிறந்த பாடலாசிரியர் விருதை அவர் பல முறை வென்றுள்ளார். இவர் 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
- கேரள மாநில பால சாகித்ய நிறுவனம் விருது 1995
- கேரள சாகித்ய அகாடமி விருது 2008 [3]
- உள்ளூர் விருது
- அபுதாபி சக்தி விருது
- மூளூர் விருது
- ஏபி கலைக்காடு விருது
- எசு.பி.டி விருது
- நிமிசகவி அச்சல் ஆர். வேலு பிள்ளை விருது
- ஏழுமங்கலம் வாமதேவன் விருது
- பந்தளம் கேரள வர்மா விருது [4]
- எம்எசு ருத்ரன் விருது [5]
- சன்னி செருக்கனும் சங்கீத பெண்களூம் நூலுக்காக 2015 ஆம் ஆண்டிற்கான குழந்தை இலக்கியத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது
- 2016 இல் ஆசான் சிமரக கவிதா புரசுகாரம்
- 2020 ஆம் ஆண்டில் ஐ.வி. தாசு விருது [6]
- 2020 ஆம் ஆண்டில் வயலார் விருது [7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads