கோட்டயம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டயம் மாவட்டம் (Kottayam district) கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.[2][3]
மேற்குத் தொடர்ச்சி மலைகள், வேம்பநாட்டு ஏரி, குட்டநாடு ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
Remove ads
வைணவத் திருத்தலங்கள்
108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. அது:
ஆட்சிப் பிரிவுகள்
இது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[4]
- பாலை சட்டமன்றத் தொகுதி
- கடுத்துருத்தி சட்டமன்றத் தொகுதி
- வைக்கம் சட்டமன்றத் தொகுதி
- ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதி
- கோட்டயம் சட்டமன்றத் தொகுதி
- புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
- சங்கனாசேரி சட்டமன்றத் தொகுதி
- காஞ்ஞிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
- பூஞ்ஞார் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[4]
- கோட்டயம் மக்களவைத் தொகுதி (பகுதி)
- மாவேலிக்கரை மக்களவைத் தொகுதி (பகுதி)
- பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதி (பகுதி)
Remove ads
குறிப்பிடத்தக்கோர்
- கே. ஆர். நாராயணன் - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
- உம்மன் சாண்டி - கேரள முதல்வர்
- மம்மூட்டி - மலையாளத் திரைப்பட நடிகர்
- அருந்ததி ராய் - பிரபல எழுத்தாளர்
- வைக்கம் முகம்மது பஷீர் - மலையாள எழுத்தாளர்
மேலும் பார்க்க
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads