பாலா (இயக்குநர்)

இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia

பாலா (இயக்குநர்)
Remove ads

பாலா பழனிசாமி (Bala, பிறப்பு: 11 சூலை 1966) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி பயின்றார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றார். இவர் இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்தியத் தேசிய விருது பெற்றுள்ளார். பாலா, "பி சுடுடியோ" என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008இன் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

விரைவான உண்மைகள் பாலா Bala, பிறப்பு ...
Remove ads

திரைப்பட வாழ்க்கை

பாடலாசிரியர் அறிவுமதி பாலாவை இயக்குநர் பாலு மகேந்திராவிடம் அறிமுகப்படுத்தினார்.[2] ஆரம்பகாலத்தில் அவரிடம் தயாரிப்பு உதவியாளராகவும்,[3] பின்னர் அவரது திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.[4][5] பாலா 1999 இல் சேது திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படம் முன்னணி நடிகரான விக்ரமிற்கு புகழைப் பெற்றுத் தந்தது. அவர் தமிழ்த் திரைப்படத் துறையில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலமாக எந்த வெற்றியும் அங்கீகாரமும் இல்லாமல் போராடினார். 60இற்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் இப்படத்தைப் பார்த்து, சோகமான இறுதிக்கட்டக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததால், அதைத் திரையிடத் தயங்கினர். இப்படம் எந்த விளம்பரமும் இல்லாமல் குறைந்தளவில் வெளியிடப்பட்டது. ஆனால் முதல் நாளுக்குப் பிறகு திரைப்படம் பேசு பொருளாகிப் பிரபலமடைந்தது.[6][7] விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று வெற்றி பெற்றதால் இப்படம் ஒரு 'புதிய அத்தியாயங்களைத்' தொடங்கியதாகக் கூறப்பட்டது.[8] இதன் வெற்றி கன்னடத்திலும் (கூச்சா) தெலுங்கிலும் (சேச்சு), இந்தியிலும் (தேரே நாம்) மறு ஆக்கம் செய்ய வழிவகுத்தது. பாலா அடுத்ததாக 2001 இல் நந்தா என்ற திரைப்படத்தை உருவாக்கினார். இப்படம் சூர்யாவிற்கு திரைத்துறையில் ஒரு திருப்புமுனையை அளித்தது.[9]

விக்ரம், சூர்யா இருவருக்கும் தலா ஒரு வெற்றிப் படத்தை வழங்கிய பிறகு, பாலா இரண்டாவது முறையாக இரண்டு நடிகர்களுடனும் மீண்டும் இணைந்தார். இரண்டு முன்னணி நடிகர்களையும் முதல் முறையாக பிதாமகன் (2003) படத்தில் ஒன்றிணைக்கச் செய்தார். பாலா படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை நன்றாக வடிவமைத்து படத்திலுள்ள திருப்பங்களால் இரசிகர்களைக் கவர்ந்தார். பல்வேறு உணர்வுகளுடன் கூடிய பிதாமகன் பார்வையாளர்களை மகிழ்வித்தது. திரைப்படம் நீண்ட காலமாக இரசிகர்களின் நினைவிலிருக்க இயக்குநர் ஓர் உணர்வுபூர்வமான இறுதிக்காட்சியை வழங்கினார்.[10]

56-ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவின் தலைவரான சாஜி என். கருண், இவ்வாறு கூறியிருந்தார். "பாலா பல வகைகளில் தனித்துவமானவர். தமிழ்த் திரைப்படங்களின் குணாதிசயங்களை அவர் மாற்றியமைத்த விதம் பாராட்டுக்குரியது... புதியவர்களில் மாற்றத்திற்கு முயற்சித்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் தமிழ்த் திரைப்படக் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதில் பாலா முன்னணியில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்.[11]

2009 இல், ஆர்யா, பூஜா உமாசங்கர் நடித்த நான் கடவுள், சிறந்த இயக்கத்திற்கான முதல் தேசிய திரைப்பட விருதை வென்றது.[12] 2011 இல், ஆர்யா, விஷால் ஆகியோர் நகைச்சுவையான அவன் இவன் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[13] பி சுடுடியோசு என்ற தயாரிப்பு நிறுவனத்தால், பரதேசி (2013) என்ற திரைப்படத்தை பாலாவே தயாரித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவின் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றம், கிட்டத்தட்ட ஒரு பழங்கால, வழுக்கையான, நவீனமற்ற கிராமத்தவராக மாற்றும் சவாலை ஏற்றுக்கொள்கிறது. தனது முந்தைய திரைப்படங்களில் இளையராஜா யுவன் சங்கர் ராஜா ஆகியோருடன் பணிபுரிந்த பிறகு, பாலா முதன்முறையாக பரதேசி திரைப்படத்திற்காக ஜி. வி. பிரகாஷ்குமாருடன் இணைந்தார்.[14] 2016 இல், தாரை தப்பட்டையின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் சிறந்த தரம் வாய்ந்தவையாகவும், தொழில்நுட்ப சிறப்புகளுடனும் இருந்தன.[15] 2018 இல், நாச்சியார் என்ற திரைப்படத்தில் ஜோதிகா தலைப்புப் பாத்திரத்தில் நடித்தார். அதேநேரத்தில் ஜி. வி. பிரகாஷ் குமாரும், புதுமுக நடிகை இவானாவும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.[16] 2020 இல், காதல் நாடகத் திரைப்படம்  வர்மா சர்ச்சைகளால் ஏமாற்றமடைந்தது.[17]

Remove ads

சர்ச்சை

பாலா, அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமான வர்மா திரைப்படத்தில் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான உரிமைகளை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் வாங்கியது. முதன்மைப் புகைப்படம் எடுக்கும் பணி செப்டம்பர் 2018 இல் நிறைவடைந்தது. 2019 பெப்பிரவரி 7 அன்று, ஈ4 எண்டர்டெயின்மெண்ட் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் பாலா வழங்கிய திரைப்படக் காட்சிகளில் அவர்கள் திருப்தி அடையாததால் ஒரு முழுமையான மறு படப்பிடிப்புக்குச் செல்கிறோம் என்று கூறினர். முன்னணி நடிகர் துருவை தக்கவைத்துக்கொண்டே, முற்றிலும் புதிய நடிகர் குழுவுடன் படம் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்தனர். இக்கருத்துகளை பாலா ஏற்கவில்லை. மாற்றங்களைச் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதால், "படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக" படத்திலிருந்து விலகுவது தனது சொந்த முடிவு என்று கூறினார். தமிழ்த் திரைப்படத் துறையில் முதன் முதலாக, திரைப்படப் பணிகள் முடிந்த போதிலும் திருப்திகரமான இறுதி வெட்டு இல்லாததால் படத்தின் தயாரிப்பாளர் படத்தை வெளியிட மறுத்த முதல் நிகழ்வு இதுவாகும்.[18]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

பாலா மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மதுரையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்தார். தாயார் ஒரு இல்லத்தரசியாவார். பாலா தனது பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.[19] இவர் 2004 இல் முத்துமலர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 இல் பாலாவும் முத்துமலரும் விவாகரத்து செய்தனர்.[20]

இயக்குநராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

தயாரிப்பாளராக

பாலாவின் இயக்கத்தில் இல்லாத தயாரித்த திரைப்படங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

புத்தகங்கள்

  • இவன் தான் பாலா (2004)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads