உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்

இது உத்திரப் பிரதேச மாநில அரசின் துறையில் கீழ் செயல்படும் ஓர் பொதுப் போக்குவரத்து சேவையாகும். From Wikipedia, the free encyclopedia

உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்
Remove ads

உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேச அரசு இயக்கும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்தக் கழகம் உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது, அருகிலுள்ள மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. கிட்டத்தட்ட 13041[1] பேருந்துகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 14 லட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும் இப்பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்தக் கழகத்தின் தலைமையகம் லக்னோவில் உள்ளது. 116 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Thumb
NH-2 a UPSRTC bus
Thumb
பாராபங்கி அரசுப் பேருந்து நிறுத்தம்
Thumb
போக்குவரத்துக் கழகத்தின் சின்னம்
விரைவான உண்மைகள் Slogan, Parent ...
Remove ads

பேருந்துகள்

மக்களின் வசதிக்காக வெவ்வேறு வகை பேருந்துகளை உத்தரப் பிரதேச மாநில அரசு இயக்குகிறது.

  • ஜனதா

மாவட்டத் தலைநகரங்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கும் பிற ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும். குறைவான போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  • மினி

மாவட்டத் தலைநகரங்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கும் பிற ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும். இவை ஜனதா வகை பேருந்துகளைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியவை.

  • சாதாரண வகை

இவை மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. சாதாரண கட்டணம் பெறப்படுகிறது.

  • பவன் கோல்டு

இவை பாய்ண்டு-பாய்ண்டு வகை பேருந்துகளாகும். மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. சரியான நேரத்தில் புறப்படக் கூடிய பேருந்துகள்

  • படுக்கை வசதி கொண்ட பேருந்துகள்

இவ்வகைப் பேருந்துகளில் நீண்ட தொலைவுகளுக்கு பயணிக்கலாம். இவற்றில் இரண்டடுக்குகள் உண்டு

  • குளிரூட்டப்பட்ட பேருந்துகள்

இவை குளிரூட்டி வசதி கொண்டவை. இவ்வகை பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

  • பிளாட்டினம் லைன்

வால்வோ வகை பேருந்துகள். தாராளமான இட வசதி கொண்ட இப்பேருந்துகள் மாவட்டத் தலைநகரங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

  • ராயல் குரூசர்

இவ்வகைப் பேருந்துகள் உலகத் தரம் மிக்கவை. இவை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன.

  • நகரப் பேருந்துகள்

இவை லக்னோ, கான்பூர், ஆக்ரா, வாரணாசி, அலகாபாத், மேரட், பைசாபாத், நொய்டா, மதுரா ஆகிய நகரங்களில் இயங்குகின்றன. இவை ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads