உத்தர காண்டம்

From Wikipedia, the free encyclopedia

உத்தர காண்டம்
Remove ads

உத்தர காண்டம் (Uttara Kanda) வால்மீகி எழுதிய இராமாயணம், யுத்த காண்டத்துடன் நிறைவுகிறது. பின்னர் அயோத்தியில் நடந்த இராமர்-சீதை, லவன்-குசன் ஆகியவர்களின் வரலாற்றுச் செய்திகளை உத்தர காண்டம் கூறுகிறது. இக்கண்டத்தில் வதந்தியான பொய்ச் செய்தியை கண்டு வருத்தமுற்று, கர்ப்பிணியான சீதையை, இராமர் காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன்-குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும், வால்மீகி முனிவர் லவ-குசர்களுக்கு, போர்க்கலையையும், மேலும் தான் இயற்றிய இராமாயணத்தையும் இலவ-குசர்களுக்கு கற்பித்தலும் கூறப்படுகிறது.

Thumb
இராமர் பட்டாபிசேகம்
Thumb
சீதையை வால்மீகி ஆசிரமத்தில் சேர்த்தல், லவன்-குசர்கள் பிறப்பு மற்றும் வால்மீகி லவ-குசர்களுக்கு கல்வி மற்றும் போர் பயிற்சி கற்றுத் தருதல் மற்றும் இராமகாதையை எடுத்துரைத்தல்
Remove ads

அசுவமேத யாகம்

சீதையின் உருவ பொம்மையைத் தனருகில் வைத்துக் கொண்டு, இராமர் அசுவமேத யாகம் செய்வதும், பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட வேள்விக் குதிரையை, இலவ-குசர்கள் கட்டி வைத்தலும், வேள்விக் குதிரைகளை மீட்க வந்த சத்துருக்கனன், பரதன், இலக்குமணன் முதலானோர்களை இலவ-குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் இராமரே நேரில் வந்து, இலவ-குசர்களை சந்தித்து வேள்விக் குதிரையுடன், லவ-குசர்களையும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதும், சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி இறத்தலும், இராமர் ஆயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்ட பின்னர், இராமன் தனது நாட்டின் பகுதிகளை இலவ- குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தல் போன்ற விவரங்கள் உத்தர காண்டத்தில் உள்ளது. இராமர் வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து, தனது உடன்பிறப்புகளுடன் பூவுலகை விட்டு வைகுந்தம் ஏகும் வரை உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.

Remove ads

இராமாயணச் சொற்பொழிவுகளில்

இராமாயணக் கதாகாலட்சேபங்களிலும், [1]உபன்யாசங்களிலும் [2]உபன்யாசங்களிலும் இராமர் பட்டாபிசேகத்துடன் சொற்பொழிவை நிறைவு செய்வர். துன்பியலாக முடியும் உத்தர காண்டப் பகுதியை எடுத்துரைப்பதில்லை என்பது மரபாக உள்ளது.

பிரபல கலாசாரத்தில்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads