உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில்map
Remove ads

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டடின், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டது, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள், சம்பவராயர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் போன்றோரால் திருப்பணிகள் செய்யபட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், பெயர் ...

இந்த சுந்தரராஜ வரதனைப் பிரும்மா, ருத்ரன், பூதேவி, மார்க்கண்டேயர் முதலியோர் வழிபட்டு முத்தியடைந்தார்கள் என்பது தல புராண வரலாறு கூறும் செய்தியாகும்.

Remove ads

கோயில் அமைப்பு

இக் கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்தில் சுந்தர வரதராஜர் உள்ளார். இவர் நின்ற கோலத்தில் சேவை சாதிப்பார். இவரைத் தவிர, இந்த அடித்தளத்திலேயே அச்சுத வரதன், அநிருத்தவரதன், கல்யாணவரதன், ஆனந்தவல்லித்தாயார், ஆண்டாள் முதலியோர் உள்ளனர்.

அடுத்த தளத்தில் இருப்பவர் வைகுண்ட வரதர். அவருடன் கிருஷ்ணார்ச்சுனர், யோக நரசிம்மர், லக்ஷ்மி வராகன் ஆகியோர் இருக்கிறார்கள். மூன்றாவது தளத்தில் ரங்கநாதவரதர் பள்ளிகொண்டுள்ளார். இக்கோயில் இப்படி மூன்று தளங்களாகக் கட்டப் பட்டிருந்தாலும், அவைகளில் வீற்றிருக்கும் ஸ்திர பேதங்கள் நேருக்கு நேராக ஒன்றின் மேல் ஒன்றாக அமைக்கப் படவில்லை, இப்படி விமான அமைப்பும் மூர்த்திகளின் அமைப்பும் கொண்ட கோயில் தமிழ் நாட்டில் அதிகம் இல்லை எனப்படுகிறது.

Remove ads

வெளி இணப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads