உயர்நிலை ஆராய்ச்சி நிறுவனம்
இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள ஒரு கல்வி நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயர்நிலை ஆராய்ச்சி நிறுவனம் (Institute of Advanced Research) இந்தியாவின் குசராத்து மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ளது. மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகம் என்ற பெயராலும் இந்நிறுவனம் அழைக்கப்படுகிறது. புதுமையான நவீன தனியார் பல்கலைக்கழகமான[2] உயர்நிலை ஆராய்ச்சி நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட குசராத்து தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது.[3]
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட தொண்டு அமைப்பான பூரி அறக்கட்டளை இப்பல்கலைக்கழகத்தை நிறுவி நிதியுதவி அளிக்கிறது. பூரி அறக்கட்டளையுடன் குசராத்து அரசாங்கம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் மற்றும் அப்போதைய குசராத்து மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் ஆதரவுடன் இந்நிறுவனம் நிறுவப்பட்டது.
குசராத்து மாநிலத்தில் உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டை உயர்த்துவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான முக்கிய காரணமாகும். தொழில்ரீதியாக கவனம் செலுத்தும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads