உயிர் தமிழுக்கு

2024 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

உயிர் தமிழுக்கு
Remove ads

உயிர் தமிழுக்கு (Uyir Thamizhukku) என்பது 2024-இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அரசியல் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் அஜயன்பாலா, பால முரளிவர்மன் ஆகியோரால் எழுதப்பட்டு ஆதம் பாவா இயக்கியது. அமீர் சுல்தான், இமான் அண்ணாச்சி, சாந்தினி ஸ்ரீதரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்தை மூன் பிக்சர்சு, வி. கிரியேசன்சு ஆதம் பாவா தயாரித்துள்ளார். ஆனந்தராஜ், சரவணா சக்தி, சுப்பிரமணியம் சிவா, மகாநதி சங்கர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2]

விரைவான உண்மைகள் உயிர் தமிழுக்கு, இயக்கம் ...

வித்யாசாகர் இசையமைத்த இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவும், அசோக் சார்லசு படத்தொகுப்பும் மேற்கொண்டனர். உயிர் தமிழுக்கு 2024 மே 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

Remove ads

நடிகர்கள்

வெளியீடு

உயிர் தமிழுக்கு 2024 மே 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3]

வரவேற்பு

தி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அபினவ் சுப்பிரமணியன் இப்படத்திற்கு 5 நட்சத்திரங்களுக்கு 2 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு "உயிர் தமிழுக்கு ஒரு பயனற்ற படத்திற்குள் விரைவான பொழுதுபோக்கை வழங்குகிறது" என்று குறிப்பிட்டார்.

டைம்ஸ் நவ் மணிகண்டன் கே. ஆர். இப்படத்திற்கு 5 நட்சத்திரங்களுக்கு 2.5 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு "உயிர் தமிழுக்கு ஒரு விதிவிலக்கான அரசியல் அதிரடி அல்ல. ஆனால் இது நிச்சயமாக சலிப்பாக இல்லை. எளிதில் ஒரு முறை பார்க்கும் படமாகும்" என்று குறிப்பிட்டார்.[4]

சினிமா எக்ஸ்பிரஸின் அக்சய் குமார் படத்திற்கு 5 நட்சத்திரங்களுக்கு 1.5 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு "நீங்கள் குறைந்தபட்சம் ஒரு மீட்டெடுக்கும் அம்சத்தை எப்பலனும் இல்லாமல் ஊகிக்கும் சந்தேகத்திற்குரிய படங்களின் பட்டியலில் இப்படம் எளிதில் சேரும்" என்று குறிப்பிட்டார். ஏபிபி நாட்டின் பாச்சி ஓவேரியன் இப்படத்திற்கு 5 இல் 2,25 நட்சத்திரங்களை மதிப்பிட்டு "படம் பொறுமையாக பார்க்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், வித்தியாசமான அரசியல் திரைப்படம், திரையரங்குகளுக்கு தாராளமாக செல்ல முடியும்" என்று குறிப்பிட்டார்![5][3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads