உருசியாவின் முதலாம் நிக்கலாசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் நிக்கலாசு (Nicholas I, உருசியம்: Николай I Павлович, ஒ.பெ நிக்கலாய் I பாவ்லவிச்; 6 சூலை [யூ.நா. 25 சூன்] 1796 – 2 மார்ச் [யூ.நா. 18 பெப்ரவரி] 1855) உருசியப் பேரரசராக 1825 முதல் 1855 வரை பதவியில் இருந்தவர். இதே வேளையில் இவர் போலந்து மன்னராகவும், பின்லாந்து இளவரசராகவும் இருந்தார்.
நிக்கலாசு இவருக்கு முன்னர் பேரரசராக இருந்த முதலாம் அலெக்சாந்தரின் தம்பி ஆவார். அலெக்சாந்தர் 1825 திசம்பரில் இறந்த சில நாட்களில் இடம்பெற்ற திசம்பர் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இராணுவக் கிளர்ச்சி தோல்வியுற்ற போதிலும், மரபுரிமைக்கிணங்க முதலாம் நிக்கலாசு பேரரசராக முடிசூடினார்.[1] முதலாம் நிக்கலாசு ஒரு புறத்தே புவியியல் விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பாரிய தொழில்மயமாக்கல் போன்றவற்றால் குறிப்பிடத்தக்கவராக இருந்தாலும், மறுபுறத்தே நிர்வாகக் கொள்கைகளை மையப்படுத்துதல், கருத்து வேறுபாட்டை அடக்குதல் ஆகியவற்றின் மூலம் சர்ச்சைக்குரிய பிற்போக்குவாதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டார். இவரது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இவருக்கு ஏழு பிள்ளைகள், அனைவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள்.[2]
முதலாம் நிக்கலாசு தனது பதவிக்காலத்தில் ஒரு சுயாதீனமான கிரேக்க அரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார், 1826-1828 உருசிய-பாரசீகப் போரின்போது கஜார் பாரசீகத்தில் இருந்து ஜடார் மாகாணத்தையும் மீதமுள்ள இன்றைய ஆர்மீனியா மற்றும் அசர்பைஜானையும் கைப்பற்றியதன் மூலம் காக்கேசியாவை மீளக்கைப்பற்ற முடிந்தது. 1828-1829 உருசிய-துருக்கியப் போரையும் வெற்றிகரமாக முடித்தார். இருப்பினும், பின்னர், உருசியாவை 1853–1856 கிரிமியப் போருக்கு செல்ல வைத்தார். இது அங்கு பேரழிவைத் தந்தது. "முதலாம் நிக்கலாசின் ஆட்சி உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பேரழிவுகரமான தோல்வி" என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.[3] அவரது இறப்பிற்கு முன்னதாக, உருசியப் பேரரசு 20 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (7.7 மில்லியன் சதுர மைல்கள்) அதன் புவியியல் உச்சநிலையை அடைந்தது,
நிக்கலாசு 1855 மார்ச் 2 ஆம் நாள், கிரிமியப் போர்க் காலத்தில் சென் பீட்டர்ஸ்பேர்க், குளிர்கால அரண்மனையில் நுரையீரல் அழற்சியினால் இறந்தார்.[4] அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின.[5] அவரது உடல் சென் பீட்டர்சுபர்க் பீட்டர், பவுல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Remove ads
குடும்பம்
முன்னோர்
வாரிசுகள்
முதலாம் நிக்கலாசிற்கு மனைவி அலெக்சாந்திரா பியோதரவ்னாவிடம் இருந்து ஏழு சட்டபூர்வமான பிள்ளைகள்[6]
Remove ads
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads