உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூன்றாம் அலெக்சாந்தர் (Alexander III) அல்லது "அலெக்சாந்தர் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ்" (Alexander Alexandrovich Romanov, உருசியம்: Алекса́ндр Алекса́ндрович Рома́нов, 10 மார்ச் 1845 – 1 நவம்பர் 1894) என்பவர் உருசியா, போலந்து ஆகியவற்றின் பேரரசராகவும், பின்லாந்தின் இளவரசராகவும், 13 மார்ச் [யூ.நா. 1 மார்ச்] 1881 முதல் 20 அக்டோபர் [யூ.நா. 8 அக்டோபர்] 1894 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். இவர் பெரும் பழமைவாதியாக இருந்தார். அவரது தந்தை இரண்டாம் அலெக்சாந்தர் கொண்டு வந்த பல சீர்திருத்த நடவடிக்கைகளை இல்லாதொழித்தார். இவரது காலத்தில் உருசியப் பேரரசு எவ்வித பெரும் போரிலும் பங்கு கொள்ளவில்லை. இதனால் இவர் "அமைதி காப்பவர்" என அழைக்கப்பட்டார்.
Remove ads
ஆட்சி, 1881–1894
1881 மார்ச் 13 இல் அலெக்சாந்தரின் தந்தை பேரரசர் இரண்டாம் அலெக்சாந்தர் நரோத்னயா வோல்யா என்ற தீவிரவாத இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் மூன்றாம் அலெக்சாந்தர் என்ற பதவிப் பெயருடன் 1881 மார்ச் 13 இல் உருசியப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரும் மனைவி மரியா பியோதொரொவ்னாவும் அதிகாரபூர்வமாக 1883 மே 27 இல் முடி சூடிக் கொண்டார்கள்.
இறப்பு

1894 ஆம் ஆண்டில், மூன்றாம் அலெக்சாந்தர் தீர்க்க முடியாத சிறுநீரகக் கோளாறு காரணமாக சுகவீனமுற நேரிட்டது. மரியாவின் உறவினரும், கிரேக்க அரசியுமான ஒல்கா தனது கோர்ஃபு என்ற தீவில் உள்ள மாளிகையில் அலெக்சாந்தரைத் தங்க வருமாறு அழைத்தார். இடம் மாற்றம் அவரைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையில்[1] அவரும் குடும்பத்தினருடன் அங்கு செல்லும் வழியில் கிரிமியாவைத் தாண்டி அவரால் செல்லுவதறேகு அவரது நிலை இடம் கொடுக்கவில்லை. கிரிமியாவில் உள்ள லிவாதியா அரண்மனையில் மனைவியின் மடியில் 1 நவம்பர் [யூ.நா. 20 அக்டோபர்] 1894 இல் த்னது 49 வது வயதில் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மூத்த மகன் இளவரசர் நிக்கொலாசு இரண்டாம் நிக்கொலாசு என்ற பதவிப் பெயரில் உருசியப் பேரரசராக முடி சூடிக் கொண்டார். அலெக்சாந்தரின் உடல் 1894 நவம்பர் 18 இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள பீட்டர், பவுல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads