உருசிய வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம்

உருசியாவின் நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia

உருசிய வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம்
Remove ads

வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம் (North Caucasian Federal District,உருசியம்: Се́веро-Кавка́зский федера́льный о́круг, Severo-Kavkazsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். இது தீவிர தெற்கு உருசியாவில், வடக்கு காகசஸின் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நடுவண் மாவட்டம் 19 சனவரி 2010 அன்று தெற்கு நடுவண் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. நடுவண் மாவட்டத்தில் உள்ளடக்கிய பகுதிகளின் மக்கள் தொகையானது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,428,826 ஆக இருந்தது. பரப்பளவு 170,400 சதுர கிலோமீட்டர்கள் (65,800 sq mi) ஆகும். தற்போதைய ஜனாதிபதி தூதர் யூரி சைகா ஆவார்.

Thumb
தாகெஸ்தான் இயற்கை
விரைவான உண்மைகள் வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம் Северо-Кавказский федеральный округ, நாடு ...
Remove ads

மக்கள்வகைப்பாடு

2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் உருசிய இனத்தவர் 2,854,040 (30.26%) என மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களாக உள்ளனர். ஆனால் ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசத்தில் 80% பெரும்பான்மையாக உருசியர்கள் உள்ளனர். மேலும் வடக்கு ஒசேத்திய-அலனீயா, கபர்தினோ-பல்கரீயா, மற்றும் காராசாய்-செர்கெஸ்ஸியா போன்ற பகுதிகளில் உருசியர்களின் எண்ணிக்கை 20% என குறைவாகவே உள்ளது. இப்பகுதிகளில் பெரும்பாலும் செச்சன மொழி பேசும் முஸ்லீம் இனத்தினரும், பழங்குடி குழுவினருமே உள்ளனர். மேலும் வடக்கு காகசஸ் நடுவண் மாவட்டமே உருசியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாகும்.

நடுவண் பகுதி பிரிவுகள்

மேலதிகத் தகவல்கள் link=|வடக்கு காகசியன் கூட்டாட்சி மாவட்டம் வரைபடம் உருசிய அகர வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன., # ...

மொத்த கருவுறுதல் வீதம்

  • 2005 - 1.64
  • 2010 - 1.99
  • 2015 - 1.98
  • 2019 - 1.78
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads