செச்சினியா

From Wikipedia, the free encyclopedia

செச்சினியா
Remove ads

செச்சினியக் குடியரசு (Chechen Republic, ரஷ்யன்: Чече́нская Респу́блика, செச்சேன்ஸ்கயா ரிஸ்புப்ளிக்கா; செச்சின்: Нохчийн Республика, Noxçiyn Respublika), அல்லது, பொதுவாக, செச்சினியா (Chechnya, Чечня́; Нохчийчоь, Noxçiyçö), என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.

விரைவான உண்மைகள் செச்சினியா, நாடு ...
Thumb
செச்சினியா மற்றும் கவ்காசஸ் வரைபடம்
Thumb
செச்சினியாவில் கவ்காசஸ் மலைகளின் ஒரு தோற்றம்

இது வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்[5]. பின்னர் அது de facto அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மட்டுமே ஜனவரி 2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது[6]. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads