காராசாய்-செர்கெஸ்ஸியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காராசாய் செர்கெஸ்சியா குடியரசு (Karachay-Cherkessia உருசியம்: Карача́ево-Черке́сская Респу́блика) உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்றாகும். இது தென் ஐரோப்பிய உரசியாவில் உள்ளது.
காராசாய்-செர்கெஸ்சியா சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட குடியரசு ஆகும், பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளை உள்ளடக்கியது. குடியரசில் பல்வேறுபட்ட இனக் குழுக்கள் உள்ளன, இந்த அரசில் ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[11] 2010 இல் மக்கட்தொகை அரை மில்லியனுக்கும் குறைவு.
Remove ads
நிலவியல்


காராசாய்-செர்கெஸ்சியா சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட குடியரசு ஆகும், இக்குடியரசின் எல்லைகளாக வடக்கு மற்றும் வடமேற்கில் கிராஸ்னதார் பிரதேசம், வடகிழக்கில் இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு, மேற்கில் அப்காசியா, தென்கிழக்கில் கபர்தினோ-பல்கரீயா தெற்கில் சார்ஜியாவின் செமிகிரிலோ சிமோ ஸ்வானிட்டி பகுதியாகும். இது பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளை உள்ளடக்கியது. இக்குடியரசு வடக்கில் இருந்து தெற்காக 140 கிலோமீட்டர் (87 மைல்) மற்றும் கிழக்கில் இருந்து மேற்கு 170 கிலோமீட்டர் (110 மைல்) என்று நீண்டுள்ளது. குடியரசின் பரப்பளவில் 80% மலைப்பகுதியாக உள்ளது. குடியரசின் மிக உயரமான மலை எல்பிரஸ் மலை ஆகும், இது 5.642 மீட்டர் (18,510 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. இம்மலை கபர்தினோ பல்கரீயா குடியரசின் எல்லைப்பகுதியில் உள்ளது. இக்குடியரசு நீராதாரங்கள் நிறைந்தது. மோத்தம் 172 ஆறுகள் குடியரசில் இருக்கிறது, தன் பகுதி மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது சுமார் 130 பனி உறைந்த ஏரிகள் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் கனிம நீரூற்றுகள் மிகுதியாக உள்ளன. குடியரசின் காலநிலை குறுகிய குளிர் காலமும், நீண்ட, சூடான, ஈரப்பதமான கோடைக் காலம் என்று உள்ளது. சராசரி சனவரி வெப்பநிலை -3.2 டிகிரி செல்சியஸ் (26.2 °F), மற்றும் சராசரி சூலை மாத வெப்பநிலை +20.6 டிகிரி செல்சியஸ் (69.1 °F) ஆகும். சராசரி ஆண்டு மழை மலைகளில் 2,500 மில்லி மீட்டர் (98 அல்குளம்) சமவெளிகளில் 550 மில்லி மீட்டர் (22 அங்குளம்) என்று வேறுபடுகின்றது. இங்கு உள்ள இயற்கை வளங்கள் தங்கம், நிலக்கரி, களிமண் போன்றவை ஆகும்.
Remove ads
வரலாறு
கராசே-செர்கீஸ் தன்னாட்சிப் பகுதி சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அதாவது, 1922, சனவரி 12 அன்று உருவாக்கப்பட்டது. பின்னர் அதை பிரிந்தது கராசே தன்னாட்சிப் பகுதி மற்றும் செர்கீஸ் தேசிய பிராந்தியம் என 30 ஏப்ரல் 1928 அன்று உருவாக்கப்பட்டது. தன்னாட்சிப் பகுதியாக 26 ஏப்ரல் 1926 அன்று நிலை உயர்த்தப்பட்டது.
இனக் குழுக்கள்

2010 கணக்கெடுப்பின்படி, குடியரசின் மக்கட்தொகையில் 41% வரை கராச்சிய மக்களும், 32% ரஷ்ய இனத்தினரும், செர்கீசியர்கள், மற்றும் அபாசின்கள் ஆகிய இனத்தினர் கூட்டாக 20% உள்ளனர்.
மதம்
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புபடி, இப்பிராந்திய மக்கள் தொகையில் 48% மக்கள் முஸ்லீம்கள், 13.6% உருசிய மரபுவழித் திருச்சபை (கிருத்துவம்) , 12% ஒருவகை நாட்டுப்புற சமயத்தவர்கள், 2% பொதுவாக இருக்கும் கிருத்துவர், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்துவர், 12% ஆண்மீக நாட்டம் அற்றவர்கள், 7% நாத்திகர் , மேலும் 4.4% உள்ள மக்கள் மற்ற மதத்தினராகவோ அல்லது கேள்விக்கு பதில் தராதவர்கள் ஆவர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads