உருபீடியம் நைட்ரேட்டு

From Wikipedia, the free encyclopedia

உருபீடியம் நைட்ரேட்டு
Remove ads

ருபீடியம் நைட்ரேட்டு (Rubidium nitrate) என்பது RbNO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வெண்ணிறத்தில் காணப்படும் ஒரு கனிம வேதியற் சேர்மமாகும். இது தண்ணீரில் மிக எளிதாகக் கரையும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

பண்புகள்

Thumb
தண்ணீரில் ருபீடியம் நைட்ரேட்டு கரைதிறன்

வெண்ணிறப் படிகங்களாகக் காணப்படும் ருபீடியம் நைட்ரேட்டு தண்ணீரில் மிக நன்றாகவும் அசிட்டோனில் சிறிதளவும் கரைகிறது. தீச்சுவலை பரிசோதனையில் ருபீடியம் நைட்ரேட்டு மெல்லிய ஊதா/ மெல்லிய பழுப்பு நிற வண்ணத்தைக் காட்டுகிறது.

பயன்கள்

ருபீடியம் சேர்மங்கள் குறைவான பயன்பாடுகளையே கொண்டுள்ளன. சீசியம் நைட்ரேட்டு போலவே இதுவும் அகச்சிவப்புக் கதிர்வீச்சை உருவாக்கும் வாணச்செய்முறை தொழிலில் ஆக்சிசனேற்றியாகவும் நிறமியாகவும், உதாரணமாக ஒளியூட்டும் கிளரொளி, கவர்ந்திழுக்கும் ஒளி முதலியனவாக பயன்படுத்தப்படுகிறது. ருபீடியம் மற்றும் ருபீடியம் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் தாதுப் பொருளாகவும் பயன்படுகிறது. சில வினையூக்கிகள் மற்றும் மினுமினுப்பு எண்ணிகள் தயாரிப்பிலும் பட்டாசுத் தொழிலில் அரிதாக சிவப்பு – ஊதா நிற வெளிப்பாட்டுக்காகவும் ருபீடியம் நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

தயாரிப்பு

RbNO3 ருபீடியம் உலோகம், அதனுடைய ஐதராக்சைடு அல்லது கார்பனேட்டை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து தயாரிக்கலாம்.

RbOH + HNO3 → RbNO3 + H2O
2 Rb + 2 HNO3 → 2 RbNO3 + H2

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads