உரோம வர்த்தகம்

From Wikipedia, the free encyclopedia

உரோம வர்த்தகம்
Remove ads

உரோம வர்த்தகம் (ஆங்கிலம்: fur trade) என்பது விலங்குகளின் உரோமங்களை அவற்றின் உடலிலிருந்து பிரித்தெடுத்து அவற்றை விற்பனை செய்வதில் ஈடுபடும் ஒரு உலகளாவிய வர்த்தகம் ஆகும். நவீன காலத்தின் தொடக்கத்தில் உலக உரோம சந்தை நிறுவப்பட்டதிலிருந்து, போரியல், துருவ மற்றும் குளிர் மிதமான பகுதிகளைச் சார்ந்த பாலூட்டி விலங்குகளின் உரோமங்கள் மிகவும் சந்தை மதிப்புமிக்கவையாக விளங்குகின்றன. வரலாற்றில் உரோம வர்த்தகமானது சைபீரியா, வட அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஷெட்லேண்ட் மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் ஆகிய பகுதிகளின் காலனித்துவத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

Thumb
கனடாவில் 1890-களில் ஒரு உரோம வியாபாரி
Thumb
எஸ்டோனியாவின் தாலின் நகரில் உள்ள ஒரு உரோமக் கடை, 2019
Thumb
உரோமக் கையுறை தயாரிப்பாளர் ஒருவரது 1949-ம் ஆண்டைய விளம்பரம்

இன்று உரோம வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது; இது உரோமப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் உரோமத் துணிகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட உரோம விலங்கினைப் பிடித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இது இன்று சர்ச்சைக்குரியதாகிவிட்டது. உரோம வர்த்தகத்தில் விலங்குகள் கொடூரமாக கொல்லப்பட்டும் உயிருடன் தோலுரிக்கப்பட்டும் அதன் உரோமங்கள் எடுக்கப்படுவதால் விலங்குரிமை அமைப்புகள் உரோம வர்த்தகத்தை எதிர்க்கின்றன.[1] செயற்கையான உரோமங்களின் வருகைக்குப்பின் சில ஆடை தயாரிப்புகளில் விலங்கு உரோமப் பயன்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது.

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள் தரவுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads