சைபீரியா

உருசியாவின் புவியியல் பகுதி From Wikipedia, the free encyclopedia

சைபீரியாmap
Remove ads

60°0′N 105°0′E

விரைவான உண்மைகள் சைபீரியா Сибирь, நாடு ...

சைபீரியா (Siberia, ரஷ்ய மொழி: Сиби́рь, சிபீர்) என்பது வடக்கு ஆசியாவின் பெரும்பாலும் முழுப்பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பெரு நிலப்பரப்பைக் குறிக்கிறது. இப்பகுதி தற்போதைய ரஷ்யக் கூட்டமைப்பின் நடு மற்றும் கிழக்குப் பெரு நிலப்பரப்பில் உள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தும், 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தான ரஷ்யப் பேரரசின் பகுதியிலும் சைபீரியா இருந்தது. புவியியல் ரீதியாக, இது யூரல் மலைகளின் கிழக்கு வரையும், பசிபிக் மற்றும் ஆர்க்டிக் கடல்களின் வடிகால்கள் வரையும், ஆர்க்டிக் கடலின் தெற்கே வட-மேற்கு கசக்ஸ்தான் வரையும், மங்கோலியா, சீனா வரையும் பரந்திருக்கிறது[1]. ரஷ்யாவின் 77 விழுக்காட்டு நிலப்பகுதியை (13.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்) சைபீரியா கொண்டுள்ளது. ஆனாலும் இங்கு ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 23 விழுக்காட்டினரே (33.76 மில்லியன் மக்கள்) இங்கு வாழ்கின்றனர். இதன் மக்கள்தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு மூன்று பேர் ஆகும். இது தோராயமாக ஆஸ்திரேலியாவுக்கு சமமாக உள்ளது. இவ்வாறாக உலகிலேயே மக்கள் குடியமர்ந்த இடங்களில் மக்கள் தொகை அடர்த்தி குறைவான பகுதியாக சைபீரியா உள்ளது. சைபீரியா ஒரு தனி நாடாக இருக்குமானால் பரப்பளவில் இதுவே உலகின் மிகப்பெரிய நாடாக இருக்கும். ஆனால் மக்கள் தொகை வரிசையில் உலகிலேயே முப்பத்தி ஐந்தாவது இடத்தையும் ஆசியாவில் பதினைந்தாவது இடத்தையும் பெறும்.

உலக அளவில் சைபீரியா அதன் நீண்ட மற்றும் கடும் குளிர் காலத்திற்காக அறியப்படுகிறது. இங்கு ஜனவரி மாத சராசரி வெப்பநிலை மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் ஆகும்.[2] மேலும் உருசியா மற்றும் சோவியத் அரசாங்கங்களால் சிறைச்சாலைகள், தொழிலாளர் முகாம்கள் மற்றும் உள்நாட்டில் நாடுகடத்தப்படுபவர்களுக்கான இடம் என நீண்ட வரலாற்றை சைபீரியா கொண்டுள்ளது.

ஐரோப்பிய கலாச்சாரங்கள் முக்கியமாக உருசிய கலாச்சாரமானது தென்மேற்கு மற்றும் நடு சைபீரியாவில் வலிமையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பதினெட்டாம் நூற்றாண்டின் போது கிழக்கு ஐரோப்பாவில் இருந்த உருசிய மக்கள் இங்கு குடியேறி இதனை உருசியர்கள் அதிகமாக வசிக்கும் இடமாக ஆக்கியதே ஆகும்.[3]

Remove ads

சொற்பிறப்பு

சைபீரியா என்ற வார்த்தை எந்த மூலத்திலிருந்து தோன்றியது என்பதைப் பற்றி தெரியவில்லை. சில ஆதாரங்கள் "சைபீரியா" என்ற வார்த்தை சைபீரிய தாதர் மொழி வார்த்தையான "தூங்கும் நிலம்" (சிப் இர்) என்பதிலிருந்து தோன்றியது என்கின்றனர்.[4] மற்றொரு பார்வையின் படி இப்பெயரானது பண்டைய சிர்டியா (மேலும் "சியோபைர்" (sʲɵpᵻr)) பழங்குடி இனத்தை குறிக்கப்பட்ட பெயராகும். அப்பழங்குடியினர் பாலியோ சைபீரிய மொழியை பேசினர். பிற்காலத்தில் சிர்டியா மக்கள் சைபீரிய தாதர்களுடன் இணைக்கப்பட்டனர்.[சான்று தேவை]

நவீன காலத்தில் இப்பெயரின் பயன்படுத்தலானது உருசியப் பேரரசு சைபீரிய கானேட்டை கைப்பற்றிய பிறகு உருசிய மொழியில் தோன்றுகிறது. மற்றொரு பார்வையின் படி இப்பகுதியானது சிபே மக்களின் பெயரைக்கொண்டு பெயரிடப்பட்டது எனப்படுகிறது.[5] போலந்து நாட்டு வரலாற்றாளரான சிலிக்கோவ்ஸ்கியின் கூற்றின்படி இப்பெயரானது முன் இசுலாவிய வார்த்தையான "வடக்கிலிருந்து" (север, செவெர்) தோன்றியது என்கிறார்.[6]

அனடோல் பைகலோஃப் என்பவர் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கிறார். அவரது கூற்றுப்படி சைபீரிய மக்களுக்கு அண்டை மக்களாக வாழ்ந்த சீனர்கள், துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்கள் இதேபோன்றதொரு பெயரை இப்பகுதிக்கு வைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உருசிய மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது கூற்றுப்படி துருக்கிய மொழியில் இருந்து தோன்றிய வார்த்தைகளின் கலப்பாக இப்பெயர் இருக்கலாம். அந்த வார்த்தைகள் "சு" (தண்ணீர்) மற்றும் "பிர்" (காட்டு நிலம்).[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads