உலியானவ்சுக் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

உலியானவ்சுக் மாகாணம்
Remove ads

உலியானவ்சுக் மாகாணம் (Ulyanovsk Oblast, உருசியம்: Улья́новская о́бласть, உலியானவ்ஸ்க் ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் உலியானவ்ஸ்க் நகரம். 2010 ஆம் ஆண்டின் இரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை1,292,799 (2010 ஆண்டைய கணக்கெடுப்பு).[7]

விரைவான உண்மைகள் உலியானவ்சுக் மாகாணம்Ulyanovsk Oblast, நாடு ...
Remove ads

நிலவியல்

உலியானவ்ஸ்க் மாகாணம் எல்லைகளாக வடக்கில் சுவாசியா குடியரசு, வடகிழக்கில் தர்தாரிஸ்தான் குடியரசு, கிழக்கில் சமாரா ஒப்லாஸ்து, தெற்கில் சராத்தவ் ஓப்லஸ்து, மேற்கில் பென்சா ஒப்லாஸ்து வடமேற்கில் மொர்தோவியா குடியரசு ஆகியன அமைந்துள்ளன.

ஓப்லாசுதுவின் பரப்பளவில் கால்பங்கு நிலப்பகுதியில் இலையுதிர் காடுகள் உள்ளன ஒப்லாசுதுவின் மையத்தில் வோல்கா ஆறு பாய்ந்து இரண்டாக பிரிக்கிறது. பிராந்தியத்தின் மேற்குப் பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இங்கு 358 மீ (1,175 அடி) உயரமான மலைகள் காணப்படுகின்றன. ஒப்லாசுதுவின் கிழக்கு பகுதி பெரும்பாலும் சமவெளியாக உள்ளது. நீர்நிலைகள் பிரதேசத்தில் சுமார் 6% பரப்பளவில் உள்ளன.

சூலைமாத சராசரி வெப்ப நிலை +19 °செ (66°பாரங்கீட்). சனவரி மாத சராசரி வெப்பநிலை −11 °செ (12°பாரங்கீட்) பனிப்பொழிவு நவம்பர் மாதத்தில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கம்வரை பொழிகிறது. ஆண்டு சராசரி மழையளவு 400 மிமீ (16 அங்குளம்).

Remove ads

மக்கள் வகைப்பாடு

ஓப்லாசுது மக்கள் தொகை: 1,292,799 ( 2010 கணக்கெடுப்பு ); 1,382,811 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,400,806 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ). ஒப்லாசுது மக்களில் 55% மேலான மக்கள் உலியானவ்ஸ்க், திமிட்ரோவிகார்ட் ஆகிய இரு நகரங்களில் வாழுகின்றனர்.

  • இனக்குழுவினர் பின்வரும் விகிதப்படி வாழ்கின்றனர்.[7]
  • 73,6% உருசியர்
  • 12.2% டாடர்
  • 7.7% சுவாஷ்
  • 3.2% மால்தோவியர்
  • 3.3% மற்றவர்கள்
  • 67.890 மக்கள் தங்கள் இனம் பற்றி அறிவிக்கவில்லை.[11]
  • 2007 ஆம் ஆண்டின் முதல் பாதியில், பிறப்பு விகிதம் 1000 க்கு 9.0 என்று இருந்தது இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1991 ஆண்டில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 200 ஆயிரம் பேர்வரை குறைந்துள்ளனர்.
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[12]

2009 - 1.40 | 2010 - 1.41 | 2011 - 1.45 | 2012 - 1.57 | 2013 - 1.61 | 2014 - 1.68 (எதிர்பார்ப்பு)

Remove ads

சமயம்

Thumb

உலியானவ்ஸ்க் ஒப்லாஸ்து சமயம் (2012)[13][14]

  ஸ்லாவிக் நாட்டுப்புற சமயத்தினர் (1%)
  பொதுவான கிறித்துவர் (1%)
  பிறர் கிழக்கு மரபுவழி கிருத்தவர் (1%)
  பழைய நம்பிக்கையாளர்கள் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (12%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (9.4%)
  • அரினா அட்லஸ் 2012 ஆண்டைய கணக்கெடுப்பு:[13]
  • 60.6% உருசிய மரபுவழி திருச்சபை ;
  • 1% பொதுவான கிருத்துவர் ;
  • 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்
  • 6% இஸ்லாமியர் ;
  • 1% ஸ்லாவிக் நாட்டுப்பற கிருத்தவர்
  • 1% பழைய நம்பிக்கையாளர்கள்
  • 12% கடவுள் நம்பிக்கையிள்ள மத நாட்டமற்றவர்கள்
  • 8% நாத்திகர் ;
  • 9.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் மதத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.[13]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads