பென்சா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

பென்சா மாகாணம்
Remove ads

பென்சா மாகாணம் (Penza Oblast, உருசியம்: Пе́нзенская о́бласть, பென்சென்ஸ்கயா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186 (2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பு)[8] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பென்சா நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் பென்சா மாகாணம்Penza Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

முதன்மை ஆறுகள்

பென்சா மாகாணத்தில் சுமார் 3000 ஆறுகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த நீளம் 15,458 கி.மீ ஆகும். இதில் கீழ்கண்டவை பெரிய ஆறுகள்:

  • சுரா ஆறு
  • மோக்சா ஆறு
  • கபியோர் அல்லது ஹஃப்யோர் ஆறு
  • பென்சா ஆறு. இந்த ஆற்றின் பெயராலேயே பென்சா நகரம் அமைந்துள்ளது.

விலங்குகள்

இந்த பிராந்தியத்தில் முதுகெலும்புள்ள விலங்கினங்கள் 316 வகையான இனங்கள் உள்ளன. இதில்

  • நீர்நில வாழ்வன சுமார் பத்து இனங்கள்
  • பறவைகள் 200 இனங்கள்
  • ஊர்வன சுமார் எட்டு இனங்கள்
  • பாலூட்டிகள் 68 இனங்கள்
  • நீர்நிலைப் பகுதிகளில் சுமார் 50 மீன் இனங்கள் உள்ளன.

பொருளாதாரம்

பென்சா மாகாணம் வோல்கா பொருளாதாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உருசியாவின் முன்னணி தயாரிப்புகளான கோதுமை, கம்பு, ஓட்ஸ், தினை ஆகிய தானியங்கள் மற்றும் தீவனப்பயிர்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, கடுகு, மற்றும் இறைச்சி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.[12]

மக்கள் வகைப்பாடு

மாகாண மக்கள் தொகை: 1,386,186 (2010 கணக்கெடுப்பு); 1,452,941 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 1,504,309 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

முதன்மைப் புள்ளிவிவரங்கள்

2012ம் ஆண்டு

  • பிறப்பு: 14,777 (1000 பேருக்கு 10.8)
  • இறப்பு: 20,419 (1000 பேருக்கு 14.9) [13]

2008ம் ஆண்டு

  • பிறப்பு: 7,962 (2008 ஜனவரி-சூலை)
  • இறப்பு: 13,608 (2008 ஜனவரி-சூலை)[14]

மொத்தக் கருத்தரிப்பு விகிதம்

  • 2009 - 1.38
  • 2010 - 1.37
  • 2011 - 1.36
  • 2012 - 1.48
  • 2013 - 1.49
  • 2014 - 1.54 (கணிப்பு)[15]

இனக்குழுக்களின் விகிதாச்சாரம் (2010)

  • ரஷ்யர்கள் - 86,8%
  • தடார்கள் - 6.4%
  • மால்டோவியர்கள் - 4.1%
  • உக்ரைனியர்கள் - 0.7%
  • சுவாஷ் மக்கள் - 0.4%
  • ஆர்மேனியர்கள் - 0.3%
  • மற்றவர்கள் - 1.3%
  • 43,283 பேர் கணக்கெடுப்பில் தங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[8][16]
Remove ads

சமயம்

2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி,[17] இந்த மாகாண மக்கள்தொகையில் 42.9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 7% முஸ்லீம்கள், 15% சமயநாட்டமற்ற ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள், 9% நாத்திகர்கள், 3.1% மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[17]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads