ஊமத்தை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊமத்தை (தாவர வகைப்பாடு : Datura stramonium; ஆங்கிலம் :jimson weed, Thorn Apple ) என்பது ஒரு தாவர இனம். இதன் பூவின் பெயர் ஊமத்தம் . இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது. இது பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது ஆகும். இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.
Remove ads
பயன்கள்
ஊமத்தை இலைச் சாறைக் கொண்டு சித்தமருத்துவத்தில் மத்தன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணையானது வெட்டுக் காயம், படர்தாமரை, சிரங்கு, கரப்பான், அடிபட்டதால் உண்டான வீக்கம், மதுமோகப் புண்கள், நாளவிபாதப் புண்கள் போன்ற வற்றிற்கு வெளிப் பூச்சாக பயன்படுத்தபடுக்றது.[2]
கூவிரம்
கூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[3]
கூவிரம் பூவை இக்காலத்தில் ஊமத்தம்பூ என்கின்றனர்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads