ஊர்மிளா சிங்

From Wikipedia, the free encyclopedia

ஊர்மிளா சிங்
Remove ads

ஊர்மிளா சிங் (6 ஆகத்து 1946 – 29 மே 2018) இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர். 25 சனவரி 2010 அன்று ஆளுநராகப் பணியமர்த்தப்பட்டார்.[2]

விரைவான உண்மைகள் ஊர்மிளா சிங், இமாச்சலப் பிரதேசத்தின் 17வது ஆளுநர் ...
Remove ads

இளமை

ஊர்மிளா சிங் தற்போது சத்தீசுகர் மாநிலத்திலுள்ள இராய்பூர் மாவட்டத்தில் பிங்கேசுவர் சிற்றூரில் பிறந்தவர். மத்திய இந்தியாவின் நிலவுடமை குடும்பமொன்றில் பிறந்த ஊர்மிளாவின் கொள்ளுத் தாத்தா இராசா நட்வர்சிங் ஓர் விடுதலை வீரர். இவர் பிரித்தானியர்களால் தூக்கிலிடப்பட்டார். மற்றும் சில உறவினர்கள் அந்தமான் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

ஊர்மிளா சிங் இளவயதிலேயே சத்திசுகரின் செராய்பள்ளி அரசர், வீரேந்திர பகதூர் சிங்கிற்கு திருமணம் செய்விக்கப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இரு மகன்களும் பிறந்தனர். ஊர்மிளா குடும்ப வாழ்வில் ஈடுபாட்டுடன் இருந்தார். வீரேந்திர சிங் முதன்மையான காங்கிரசு கட்சித் தலைவரானார். தமது குடும்பம் பல நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த பகுதிகளில் இருந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். இவரது அன்னையாரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

Remove ads

அரசியல் பணிவாழ்வு

மத்தியப் பிரதேசத்தில்

தனது கணவரின் அகால மறைவை ஒட்டி அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அதே தொகுதியில் எழுந்த துணைத்தேர்தலில் போட்டியிட்டுத் தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இத்தொகுதிகளில் பலமுறை தொடர்ந்து வென்று 1985 முதல் 2003 வரை சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

பால்வளத்துறை துணை அமைச்சராகவும் (1993–95) சமூகநலத்துறை மற்றும் பழங்குடி நல அமைச்சரவை அமைச்சராகவும் (1998–2003) பொறுப்பாற்றி உள்ளார். 1996 முதல் 1998 வரை மத்தியப் பிரதேச மாநில காங்கிரசு தலைவராகவும் இருந்தார்.[3]

சத்தீசுகரில்

2000ஆம் ஆண்டில் புதிய மாநிலமாக சத்தீசுகர் உருவானது. ஊர்மிளாவின் சட்டப் பேரவைத் தொகுதி புதிய மாநிலத்தில் அமைந்தது. இதனால் 2000 முதல் 2003 வரையான முதல் சத்தீசுகர் சட்டப்பேரவையில் அவர் தானாகவே உறுப்பினரானார். ஆனால் 2003 சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரசு இரு மாநிலங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதில் ஊர்மிளாவும் தோற்றவர்களில் ஒருவரானார். 2008 தேர்தலிலும் தோல்வி அடைந்தார்.

ஆளுநராக

காங்கிரசு கட்சிக்கு இவராற்றிய சேவை மற்றும் சட்டப் பேரவையில் நீண்டகால பட்டறிவு கருதி 2010இல் இவர் இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[4] 25 சனவரி 2010 அன்று பொறுப்பேற்ற ஊர்மிளாவின் பதவிக்காலம் 24 சனவரி 2015 அன்று நிறைவுற்றது.[5] இவரே இமாச்சலப் பிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராவார்.[6]

Remove ads

இறப்பு

ஊர்மிளா சிங் 29 மே 2018 அன்று தமது 71 அகவையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மூளை தொடர்பான சிக்கல்கள் இருந்ததாகவும் சிகிச்சை பயனளிக்காது மரணமடைந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads