கொல்லம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்லம் மாவட்டம், இந்தியாவில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கொல்லம். கேரள மாநிலத்திலுள்ள இயற்கை அழகுகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியுள்ள இந்த மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டு விளங்குகிறது. ஒரு முக்கியமான துறைமுகம், சமவெளிகள், மலைகள், ஏரிகள், குடாக்கள், காடுகள், வேளாண்மை நிலங்கள், ஆறுகள் என இயற்கையும் செயற்கையுமான பல சிறப்பு அம்சங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த மாவட்டம் பண்டைக்காலத்தில் ரோமருடனும், போனீசியருடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
- இதே பெயர் கொண்ட நகரத்தைப் பற்றி அறிய, கொல்லம் கட்டுரையைப் பார்க்கவும்.
மாவட்டத்தின் ஏறத்தாழ 30% பகுதி அசுத்தாமுடி ஏரியாகும். 18.02% நகராக்கம் பெற்ற இம்மாவட்டம், சட்டம் ஒழுங்கு, சமுதாய நல்லிணக்கம் என்பவை தொடர்பில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக "இந்தியா டுடே" சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டது.
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை கொல்லம், கருநாகப்பள்ளி, குன்னத்தூர், பத்தனாபுரம், கொட்டாரக்கரை என ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] இது 13 மண்டலங்களையும், 69 ஊராட்சிகளையும் கொண்டது. கேரள சட்டமன்றத்திற்காக பத்து சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். அவை:[2]
- கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
- சவறா சட்டமன்றத் தொகுதி
- குன்னத்தூர் சட்டமன்றத் தொகுதி
- பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதி
- புனலூர் சட்டமன்றத் தொகுதி
- சடயமங்கலம் சட்டமன்றத் தொகுதி
- குண்டறை சட்டமன்றத் தொகுதி
- கொல்லம் சட்டமன்றத் தொகுதி
- இரவிபுரம் சட்டமன்றத் தொகுதி
- சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[2]
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads