கோடம்பாக்கம்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

கோடம்பாக்கம்map
Remove ads

கோடம்பாக்கம் (Kodambakkam) சென்னையின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். முக்கிய குறியீட்டு நிறுவனங்களாக மீனாட்சி சுந்தரராசன் மகளிர் கலைக்கல்லூரியும், இருபாலரும் சேர்ந்து பயிலும் பொறியியற் கல்லூரியும் அமைந்துள்ளன. விதவிதமான ஆடைகளை விற்பனை செய்யும் சேகர் எம்போரியம் இப்பகுதியில் மிகப் பிரபலமாகக் கருதப்படும். இப்பகுதியிலேயே நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் கட்டப்பெற்று பராமரித்து வரும் கல்யாணமண்டம் பிரபலமானது. லிபர்ட்டி சினிமா தியேட்டரும் இங்குதான் இருந்தது. அந்த இடத்தில் தற்சமயம் லிபர்ட்டி பார்க் என்ற ஹோட்டலும், பாரத வங்கியும் செயல்பட்டு வருகின்றன. கோடம்பாக்கம் என்றாலே தமிழ்த் திரையுலகைத்தான் குறிப்பிடுவர். தமிழ்த் திரையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்.[4] தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ. வி. எம். போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

தியாகராய நகர், வடபழநி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர் மற்றும் மேற்கு மாம்ப‌லம் ஆகிய சென்னையின் பிறப் பகுதிகள் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் க‌ட‌ற்க‌ரையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து.

கோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் ஆற்காடு சாலை (என்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். யுனைட்டட் இந்தியா காலனி, ரங்கராஜபுரம், டிரஸ்ட்புரம் மற்றும் டெய்லர்ஸ் எஸ்டேட் ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்புப் பகுதிகளாகும்.

Remove ads

நிறுவனங்கள்

லிபர்டி திரையரங்கம், இளையராஜா ஸ்டுடியோஸ், சேகர் பேரங்காடி, மேனகா அழைப்பிதழ்கள், மீனாட்சி கல்லூரி, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, லயோலா மேனிலைப்பள்ளி மற்றும் பாத்திமா மேனிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான‌ 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads