ஊர் நகரத்தின் வில் யாழ்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊர் நகரத்தின் வில் யாழ்கள் (Lyres of Ur or Harps of Ur) நான்கு கம்பி இசைக்கருவிகளான வில் யாழ்களின் தொகுதியாகும். இந்த வில் யாழ்கள் தற்கால ஈராக் நாட்டின் தென் பகுதியில் உள்ள மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரத்தின் அரச குடும்பத்தினர் கல்லறையை அகழாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்டது. இவைகள் மெசொப்பொத்தேமியாவின் மூன்றாம் வம்சத்தின், கிமு 2550 - கிமு 2450க்கும் இடைப்பட்ட பழமையான தொல்பொருள் ஆகும். இதுவே உலகின் தொன்மையான தற்போது வரை இருக்கும் கம்பி இசைக்கருவியான வில் யாழ்கள் ஆகும்.[1]இவைகள் தற்போது இராக் மற்றும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [2] வில் யாழ்களின் மரச்சட்டங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.[3]


இதனை 1929ல் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் லியோனார்டு வுல்லி என்பவர் ஈராக் நாட்டின் ஊர் நகரத்தின் அகழாய்வில் கண்டுபிடித்தார்.[4][5] இந்த வில் யாழ்கள் 4,500 ஆண்டுகள் பழமையானவை.[2] [6][7]
Remove ads
படக்காட்சிகள்
- எருது தலைக் கொண்ட வில் யாழ்களின் சித்திரப் பலகை
- இராணியின் தங்க வில் யாழ் கொண்ட எருதுத் தலை
- எருது தலைகொண்ட வெள்ளி வில் யாழ்
- எருது தலைகள் கொண்ட வில் யாழ்கள்
- இராணியின் வில் யாழின் சித்திரம்
- தொல்லியல் அறிஞர் லியோனார்டு வுல்லி கையில் வைத்துள்ள ஜிப்சத்தால் வடித்த வில் யாழ், ஆண்டு 1922
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads