மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் (Early Dynastic period (சுருக்கமாக: ED period or ED) பண்டைய மெசொப்பொத்தேமியாவில் அமைந்த தற்கால ஈராக் (சுமேரியா) நாட்டில் உரூக் மற்றும் செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் கிமு 2900 முதல் கிமு 2350 வரை விளங்கிய தொல்பொருள் வம்ச காலம் ஆகும். மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றில் இக்காலம் ஒரு பகுதியாகும். இக்காலத்தில் எழுத்துக் கலை வளர்ச்சி, நகரங்கள் கட்டுமானம் மற்றும் சிறு நகர இராச்சியங்கள் தோன்றத் துவங்கியது.


மெசொப்பொத்தேமியாவின் இத்துவக்க வம்ச காலத்தில் சுமேரியாவில் தெற்கில் (கீழ் மெசொப்பொத்தேமியா) எரிது, உரூக், ஊர், லகாசு, நிப்பூர், உம்மா போன்ற புகழ் பெற்ற நகர இராச்சியங்கள் தோன்றியது.
மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளில் கிஷ், இசின், மாரி, டெல் பராக் மற்றும் எப்லா நகர இராச்சியங்கள் தோன்றியது.
மெசொப்பொத்தேமியாவில் கிபி 1800 முதல் ஊர், எசுன்னா, கிர்சு, காபாஜா போன்ற தொல்லியல் மேடுகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில் ஆப்பெழுத்துகளுடன் கூடிய களிமண் பலகைகளில் உருவங்களுடன் கூடிய உருளை முத்திரைகள் போன்ற தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது. பின் தொடரப்பட்ட பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளின் அகழ்வாராய்ச்சிகளில் மெசொப்பொத்தேமியாவின் பல தொல்லியல் மேடுகளில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது.
Remove ads
காலக் கணிப்புகள்
செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் தோன்றிய மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்திற்கு பின்னர் அக்காதியர்கள் காலம் நிலவியது. அக்காதியப் பேரரசின் கீழ் முதன்முதலில் முழு மெசொப்பொத்தேமியா இருந்தது. மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் கிமு 2900 – 2350 வரை என கணிக்கப்பட்டுள்ளது.[1][2]
மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தை, தொல்லியல் ஆய்வாளர்கள் மூன்று காலமாக பிரித்துள்ளனர்.[1][3][4][5]
கீழ் மெசொப்பொத்தேமியாவின் உரூக் காலம் (கிமு 3300–3100) மற்றும் செம்தேத் நசிர் காலம் (கிமு 3100–2900) காலங்களுக்குப் பின் தோன்றிய [6] மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தின் முதல் பகுதி (கிமு 2900–2750/2700) குறைவாக அறியப்படுகிறது.
இரண்டாவது வம்ச காலத்தில் (கிமு 2750/2700–2600) கீழ் மெசொப்பொத்தேமியாவில் எழுத்து, மொழி, கலை, இலக்கியம், மற்றும் தொழில்கள் வளரத் துவங்கியது. கீழ் மெசொப்பொத்தேமியாவை கில்கமெஷ், என்மெர்கர் மற்றும் ஆகா போன்ற புகழ்பெற்ற மன்னர்கள் ஆண்டனர். மேலும் உலகின் முதல் காவியமான கில்கமெஷ் காப்பியம் எழுதப்பட்டது.[7]
மெசொப்பொத்தேமியாவின் மூன்றாவது வம்ச ஆட்சிக் காலத்தில் (கிமு 2600–2350 ) ஆப்பெழுத்துக் கலை வளர்ச்சியடைந்திருந்தது. மேல் மெசொப்பொத்தேமியாவில் அரசியல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்திருந்தது. ஊர், எல்பா, லகாசு எசுன்னா, கபாஜா, அக்ரப், எரிது, லார்சா, சிப்பர், கிஷ், மாரி போன்ற நகர இராச்சியங்கள் பெரும்புகழுடன் விளங்கியது.
அக்காதியப் பேரரசர் சர்கோன் போன்ற மன்னர்கள் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் ஆட்சியை படிப்படியாக முடிவிற்கு கொண்டு வந்தனர்.[8][9][10][11]
Remove ads
துவக்க வம்ச இராச்சியங்கள் மற்றும் மன்னர்கள்
மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச கால ஆட்சிக்குப் பின்னர் அக்காத் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு அக்காடியப் பேரரசு (கிமு 2334 – 2154) எழுச்சி கொண்டது.
Remove ads
புவியியல் அமைப்பு
கீழ் மெசொப்பொத்தேமியா

உரூக் காலத்திற்கு பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் துவக்க வம்ச ஆட்சிகளின் காலத்தில் செமிடிக் மொழிகள் பேசிய முதல் நகரக் குடியிருப்புகளும், நகர இராச்சியங்களும், ஆப்பெழுத்து முறைகளும் தோன்றத் துவங்கியது. துவக்க வம்ச ஆட்சிக் காலத்தில் சுமேரிய நாகரிகம் உச்சத்தில் இருந்தது.


துவக்க வம்ச ஆட்சிக் காலத்தில் சுமேரியாவில் கிஷ் நாகரிகம் செழித்திருந்தது.[13][14][15] கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளால் வேளாண்மை செழித்து விளங்கியது. பார்லி, பேரிச்சம் பழ மரங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் பயிரிடப்பட்டன. ஆடு போன்ற விலங்குகளை கால்நடை வளர்ப்பு விலங்களாக வளர்த்தனர்.[16] துவக்க வம்ச ஆட்சியில் பல நகரங்களும், நகர இராச்சியங்களும் தோன்றியதால் கீழ் மெசொப்பொத்தேமியாவில் மக்கள்தொகை பெருகியது.[17][18]

துவக்க வம்ச ஆட்சிக் காலங்களில் ஊர், எல்பா, லகாசு எசுன்னா, கபாஜா, அக்ரப், எரிது, லார்சா, சிப்பர், கிஷ், மாரி போன்ற நகர இராச்சியங்கள் பெரும்புகழுடன் விளங்கியது
,







படக்காட்சிகள்
- டெல் அஸ்மரின் ஆண் சிற்பம்
- காபாஜா தொல்லியல் களத்தின் பெண் வழிபாட்டாளரின் சிற்பம்
- முழங்காலிட்டு வழிபடும் ஆணின் சிற்பம், அக்ராப் தொல்லியல் மேடு
- மாரி நகரத்தின் மன்னரின் சிற்பம்
- குர்லில் மன்னரின் சிற்பம், கிமு 2500
- கிர்சு நகரத்தின் பூசாரி தூதுவின் சிற்பம்
=
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads