ஊவா மாகாணம்
இலங்கையின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊவா (Uva, சிங்களம்: ඌව) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.
இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, யால தேசிய வனம் (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். மகாவலி, மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும்.
Remove ads
வரலாறு
இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் அருவி, ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். கதிர்காமம் முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது.
பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக இடம்பெற்ற 1818 கிளர்ச்சி ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.[2]
Remove ads
மாவட்டங்கள்
![]() |
ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- பதுளை மாவட்டம் 2,861கிமீ2
- மொனராகலை மாவட்டம் 5,639கிமீ2
முக்கிய நகரங்கள்
- பதுளை (மாநகர சபை)
- பண்டாரவளை (மாநகரசபை)
- அப்புத்தளை (நகரசபை)
- மொனராகலை
- வெலிமடை
- பசறை
- எல்லா
- மகியங்கனை
- தியத்தலாவை
- ஆலிஎலை
- பிபிலை
- வெல்லவாயா
- பெரகலை
- லுணுகலை
- புத்தளை
- மதுல்லை
- கதிர்காமம்
- தனமல்விலை
- பதல்கும்புரை
- சியாம்பலந்துவை
- ஓக்கம்பிட்டி
படக்காட்சியகம்
- அப்புத்தளையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்
- லிப்டனின் இருக்கை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads