எஃப். ஏ. ஒபயசேகரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேர் பொரெஸ்டர் அகஸ்டசு ஒபயசேகரா (Forester Augustus Obeysekera) என்பவர் பிரித்தானிய இலங்கையின் அரசியல்வாதி. இவர் இலங்கை அரசாங்க சபையில் சபாநாயகராகவும், இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.[1][2]

விரைவான உண்மைகள் சேர்பொரெஸ்டர் அகஸ்டசு ஒபயசேகராForester Augustus Obeysekera, இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகர் ...

சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் சேர் சொலமன் கிறிஸ்டோபல் ஒபயசேகராவுக்குப்[3] பிறந்த இவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றார். ரோயல் கல்லூரி துடுப்பாட்ட அணித் தலைவராகவும் இருந்தவர்.[4]

சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக 1924 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பேரவை கலைக்கப்படும் வரையில் அதன் உறுப்பினராக இருந்தார். 1931 இல் அரசாங்க சபை அமைக்கப்பட்ட போது அதன் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார். 1934 ஆம் ஆண்டில் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய போது அவரது இடத்துக்கு ஒபயசேகரா நியமிக்கப்பட்டார்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads