எக்ஸ் பாக்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ் (Microsoft Xbox) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு நிகழ்பட ஆட்ட இயந்திரம் ஆகும்.சிறுவர்களின் மத்தியில் பொழுது போக்கு விளையாட்டு சாதனமாகவும் பெரியவர்களும் இணைந்து விரும்பி விளையாடும் இயந்திரமாகவும் விளங்குகின்றது.எக்ஸ் பாக்ஸ் நவம்பர் மாதம் 15, 2001 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் முதன்முதலாக அறிமுகமானது. இந்நிகழ்பட ஆட்ட இயந்திரம் நிறுவனம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் ஒரு கேளிக்கை சாதனமற்ற தத்ரூப விளையாட்டுக்களை விற்பனை செய்யும் நிறுவனமாகத் திகழ்கின்றது.எக்ஸ் பாக்ஸ் இயந்திரம் விற்பனையான ஆரம்ப காலங்களில் ஹேலோ, ஆம்ப்ட், டெட் ஓர் அலைவ் 3 மற்றும் ஓட்வேர்ல்ட்:மன்ச்'ஸ் ஓடிசீ போன்ற நிகழ்பட ஆட்டப் பிரதிகளும் கிடைக்கப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
Remove ads
வரலாறு
ஆரம்ப காலத் தாயாரிப்பு
சீமஸ் பிளாக்லே என்னும் நிகழ்பட ஆட்டத் தயாரிப்பாளரும் அவரின் குழுவும் சேர்ந்து எக்ஸ் பாக்ஸினை வடிவமைத்தனர் மேலும் நிகழ்பட ஆட்ட இயந்திரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் உருவாக்கத்தில் உள்ளது என்ற செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரானா பில் கேட்ஸ் அவர்களால் 1999 ஆண்டு வெளியிடப்பட்டது.மேலும் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி எக்ஸ் பாக்ஸ் இயந்திரத்தின் வெளியீட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads