எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு

From Wikipedia, the free encyclopedia

எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு
Remove ads

சார்லசு II (Charles II,எசுப்பானியம்: Carlos II) (6 நவம்பர் 1661 – 1 நவம்பர் 1700) ஆப்சுபர்கு அரசமரபைச் சேர்ந்த கடைசி எசுப்பானிய அரசராவார். எசுப்பானிய நெதர்லாந்தும் (தெற்கு நெதர்லாந்து) அமெரிக்காக்களிலிருந்து எசுப்பானியக் கிழக்கிந்தியா வரை பரவியிருந்த எசுப்பானியாவின் கடல்கடந்த பேரரசும் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது. "மயக்குபவர்" (எசுப்பானியம்: el Hechizado),[1] என்றழைக்கப்பட்ட சார்லசு அவரது உடல்,அறிவு, உளக் குறைபாடுகளுக்காக அறியப்பட்டார். பல தலைமுறைகளாக ஆப்சுபர்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் புரிந்து வந்தமையால் இக்குறைபாடுகள் இவருக்கு வந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே இவரது ஆட்சி பலவீனமாக இருந்தது.

விரைவான உண்மைகள் சார்லசு II, padding-top:0.2em ...

1700இல் குழந்தைகளின்றி வாரிசின்றி இறந்தார். அரியணை ஏறுவதற்கு உரிமையிருந்த அனைத்து ஆப்சுபர்கு வாரிசுகளும் இவருக்கு முன்னரே மரித்து விட்டனர். தனது உயிலில் தனக்குப் பின்னால் 16 வயதேயான ஆன்ஷூவின் பிரபு பிலிப்பை முடிசூட நியமித்தார்; இவர் பதினான்காம் லூயியின் முதல் மனைவியும் சார்லசின் ஒன்றுவிட்ட சகோதரியுமான மாரியா தெரசாவின் பேரனாவார்.[2] (எனவே பிரான்சை ஆண்ட பிரான்சிய அரசர் லூயி XIVயின் பேரனுமாவார்). ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் இதனால் வலுப்பெறும் பிரான்சிய-எசுப்பானிய உறவு அதிகாரச் சமநிலையை பாதிக்கும் எனக் கருதின. எனவே இவரது மறைவிற்குப் பிறகு எசுப்பானிய மரபுரிமைப் போர் ஏற்பட்டது.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads