எசு. எசு. திருநாவுக்கரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசு. எசு. திருநாவுக்கரசு (S. S. Thirunavukkarasu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரைச் சேர்ந்தவர். இளங்கலை, இளநிலைச் சட்டம் பட்டங்களைப் பெற்ற திருநாவுக்கரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினைச் சார்ந்தவர். இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] இவர் மே 19, 2001 முதல் 01 மார்ச்சு 2002 வரை செய்தி, விளம்பரம், வனத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
Remove ads
தேர்தல் செயல்பாடு
2001
Remove ads
இறப்பு
திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் 22 நவம்பர் 2004 அன்று காலமானார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads