எசு. யு. அருண்குமார்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். யு. அருண்குமார் தமிழ் திரைப்படத் துறையில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டின் மதுரை அருகே உள்ள பரவையைச் சேர்ந்தவர். [2] பன்னையாரும் பத்மினியும் (2014), சேதுபதி (2016), சிந்துபாத் (2019), சித்தா (2023) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
அருண் குமார் திருமணம் மதுரையில் 2 பிப்ரவரி 2025 அன்று நடைபெற்றது.[3]
திரைப்பட வாழ்க்கை
அருண்குமார் திரைப்பட ஆர்வத்தில் சில குறும்படங்களை உருவாக்கினார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் (குறும்படங்களுக்கான தொலைக்காட்சி போட்டி) இரண்டாவது பருவத்தில் பங்கேற்றார்.[4]
விஜய் சேதுபதி நடித்த பன்னையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண்குமார் இயக்குநராக அறிமுகமானார்.[5] இந்த படம் முதலில் ஒரு குறும்படமாக இருந்தது. பின்னர் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு வேறுப்பட்ட கதையுடன் வெளியானது.[6] இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலும், இது வசூலில் வெற்றி பெறவில்லை.
பின்னர் விஜய் சேதுபதி சேதுபதி (2016) படத்தில் இணைந்து பணியாற்றிய அருண்குமார், இருவரும் சேர்ந்து வணிக ரீதியான வெற்றியை கொடுக்க விரும்பினர்.[7][8] இப்படம் வணிக ரீதியாக வெற்றிப்பெற்றது. இந்தப் படம் தெலுங்கில் ஜெயதேவ் என்ற பெயரில் அறிமுக நடிகர் காந்தா ரவியுடன் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[9] அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் (2019) திரைப்படத்தில் கைகோர்த்தார்.[10] விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை சிந்துபாத் படத்தில் அருண்குமார் நடிக்க வைத்தார்.[11] படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியா, கம்போடியா மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டன.[12]
2020 ஆம் ஆண்டில் தென்காசி சங்கிலி பறிப்பு நிகழ்வுகளைப் பற்றி இமைக்கா விழிகள் என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார்.[13] அதன் எழுத்தாளர், இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருந்தார்.
சித்தார்த் கதாநாயகனாக நடித்த சித்தா (2023) படத்தை இயக்கினார். இது செப்டம்பர் 28, 2023 அன்று வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[14][15]
கடைசியாக இவர் இயக்கி வெளியான திரைப்படம், விக்ரம் நடித்த வீர தீர சூரன் பகுதி 2 ஆகும்.[16]
Remove ads
திரைப்படங்கள்
| இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது |
முழுநீளப்படங்கள்
Feature films
குறும்படங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
