விக்ரம்
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்ரம் (17 ஏப்ரல் 1966) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), ஐ (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.[3]
விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.[4]
Remove ads
இளமைக் காலம்
விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1966 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர்.[5][6] விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.[7]
விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்தார்.[8] இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.[8][9][10]
இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார்.
Remove ads
திரைப்பட வாழ்க்கை
விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.[11] அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.
Remove ads
கலைப் பணி
விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ்த் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "தந்துவிட்டேன் என்னை" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும்.
திரைப்படங்கள்
Remove ads
பின்னணிக் குரல் கொடுத்தவை
Remove ads
பாடிய பாடல்கள்
Remove ads
தொலைக்காட்சித் தொடர்கள்
இசை ஒளிக்காட்சிகளித் தோற்றங்கள்
வர்த்தக தோற்றங்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads