எட்டாம் ராமேசஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எட்டாம் ராமேசஸ் (Ramesses VIII)[1] (ஆட்சிக் காலம்:கிமு 1130–1129)[2]), பண்டைய புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் ஏழாவது பார்வோன் ஆவார். இவர் பார்வோன் மூன்றாம் ராமேசின் மகன்களில் மிகவும் இளைவரும், இறுதியானவரும் ஆவார்.[3]இவர் புது எகிப்து இராச்சியத்தை கிமு 1130 முதல் கிமு 1129 முடிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[4]மன்னர்களின் சமவெளியில் இவரது கல்லறை இதுவரை கண்டறியப்படவில்லை. எட்டாம் ராமேசஸ் அரியணை ஏறுவதற்கு முன்னர் அரசிகளின் சமவெளியில் 43 எண் கொண்ட கல்லறை எட்டாம் ராமேசுக்காக கட்டப்பட்டது. இருப்பினும் எட்டாம் ராமேசஸ் இறந்த பிறகு அவருககான கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.[5][6]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads