எண்டெவர் விண்ணோடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எண்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour, விண்ணோட சுற்றுக்கலன்: OV-105) என்பது நாசாவின் காலாவதியான ஒரு விண்ணோட சுற்றுக்கலன் ஆகும். இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது.[1][2][3] எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,[4] ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் அட்லாண்டிசு விண்ணோடம் இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.
1986 இல் விபத்தினால் அழிக்கப்பட்ட சாலஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு ஐக்கிய அமெரிக்கப் பேரவை ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், என்டர்பிரைசு விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் டிசுக்கவரி, அத்திலாந்திசு விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.
Remove ads
வரலாறு
1991 மே மாதம் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்நேசனல் என்ற நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது 1992 மே மாதத்திலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
காப்டன் ஜேம்ஸ் குக் தனது முதல் பயணத்தில் (1768–1771) கொண்டு சென்ற பிரித்தானிய எண்டெவர் என்ற கப்பலின் பெயரால் இவ்விண்ணோடம் பெயரிடப்பட்டது.[5]
எஸ்.டி.எஸ்-130
அனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads