டிஸ்கவரி விண்ணோடம்

From Wikipedia, the free encyclopedia

டிஸ்கவரி விண்ணோடம்
Remove ads

டிஸ்கவரி விண்ணோடம் (Space Shuttle Discovery) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும்.[4] மற்றைய இரண்டும் அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் ஆகியனவாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டபோது அந்நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மூன்றாவது விண்ணோடமாக இருந்தது. டிஸ்கவரி விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விரைவான உண்மைகள் டிஸ்கவரிOV-103 ...
Remove ads

கடைசிப் பயணம்

Thumb
பன்னாட்டு விண்வெளி நிலையத்தை டிஸ்கவரி அணுகுகிறது.

கடைசியாக டிஸ்கவரி வீண்ணோடம் பிப்ரவரி 24, 2011 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. மார்ச் 9, 2011 இல் டிஸ்கவரி விண்கலம் முறைப்படி ஓய்வு பெற்றது.[5][6] இது தற்போது ஸ்மித்‌சோனியன் நிறுவனத்தின் தேசிய வான் மற்றும் விண்வெளி நிறுவன அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[7][8][9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads