எண்ணிம ஊடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எண்ணிம ஊடகம் (திசிட்டல் மீடியா) என்பது இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வடிவங்களில் குறியிடப்படும் ஏதெனும் ஓர் ஊடகமாகும். எண்முறை ஊடகங்களை எண்முறை மின்னணுவியல் சாதனங்களில் உருவாக்கலாம், பார்க்கலாம், விநியோகிக்கலாம், மாற்றியமைக்கலாம் மற்றும் பாதுகாக்கலாம்.
எண்முறை என்பது இலக்கங்களின் வரிசையுடன் குறிப்பிடப்படும் எந்தவொரு தரவையும் வரையறுக்கலாம், மேலும் ஊடகம் என்பது தகவல்களை ஒன்றாக ஒளிபரப்ப அல்லது தொடர்புகொள்வதற்கான ஒரு முறையைக் குறிக்கிறது. எண்முறை ஊடகம் என்பது ஒரு திரை மூலம் நமக்கு ஒளிபரப்பப்படும் எந்தவொரு தகவலையும் குறிக்கிறது.[1] இணையத்தில் பார்ப்பதற்காக, இணையம் வழியாக அனுப்பப்படும் உரை, கேட்பொலி (ஆடியோ), காணொளி மற்றும் வரைகலை ஆகியவை இதில் அடங்கும்.[2]
Remove ads
எண்ணிம ஊடகம்
எடுத்துக்காட்டுகளாக எண்முறை ஊடகங்களில் மென்பொருள், எண்ணிம தோற்றுரு, எண்ணிம காணொளி, நிகழ்பட ஆட்டம், வலைப் பக்கம் மற்றும் வலைத்தளம், சமூக ஊடகம், எண்ணிம முறை மற்றும் தரவுத்தளம், எண்ணிம கேட்பொலி (எம்பி3, எண்ணிம ஆவணம், மின்னூல்) போன்றவை அடங்கும். எண்ணிம ஊடகம் பெரும்பாலும் அச்சிடப்பட்ட புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் இதழ்கள் போன்ற அச்சு ஊடகங்களுடனும், புகைப்படத் திரைப்படம், கேட்பொலி நாடாக்கள் அல்லது காணொளி நாடாக்கள் போன்ற பிற பாரம்பரிய அல்லது அனலாக் ஊடகங்களுடனும் வேறுபடுகிறது.
எண்ணிம ஊடகம் சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் கணிசமாக பரந்த மற்றும் சிக்கலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மற்றும் தனி மேசைக் கணினி உடன் எண்ணிம ஊடகம் இணைந்து பத்திரிகை, மக்கள் தொடர்பு, பொழுதுபோக்கு, கல்வி, வர்த்தகம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் சீர்குலைக்கும் கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads