எண்ணிம விநியோகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எண்ணிம விநியோகம் (Digital distribution) என்பது கேட்பொலி, காணொளி, மின்னூல், நிகழ்பட ஆட்டம் மற்றும் பிற மென்பொருள் போன்றவற்றை எண்ணிம ஊடகம் மூலம் வழங்குதல் அல்லது விநியோகித்தல் ஆகும்.[1] இது இணையம் போன்ற நிகழ்நிலை விநியோக ஊடகத்தில் விநியோகத்தை விவரிக்க இந்த சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் காகிதம், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு மற்றும் காணொளி நாடாப்பேழை (வீடியோ கேசட்டுகள்) போன்ற உடல் விநியோக முறைகள் தவிர்க்கப்படுகின்றது.

நிகழ்நிலை விநியோகம் என்ற சொல் பொதுவாக தூணாகும் (புரீஸ்டாண்டிங்) தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது; பிற தயாரிப்புகளுக்கான தரவிறக்கம் செய்யக்கூடிய துணை நிரல்கள் பொதுவாக தரவிறக்கம் செய்யக்கூடிய உள்ளடக்கம் என அழைக்கப்படுகின்றன. 21 ஆம் நூற்றாண்டில் வலைப்பின்னல் அலைவரிசை திறன்களின் முன்னேற்றம் அடைந்ததால் நிகழ்நிலை விநியோகம் முக்கியத்துவம் பெற்று அமேசான்.காம், நெற்ஃபிளிக்சு போன்ற முக்கிய ஊடக ஓடை தளங்கள் 2007 இல் தொடங்கப்பட்டது.[2] நிகழ்நிலை விநியோகிக்கப்படும் புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி, இசை, மென்பொருள் மற்றும் நிகழ்பட ஆட்டம் போன்ற உள்ளடக்கம் ஓடை (ஸ்ட்ரீம்) செய்யப்படலாம் அல்லது பதிவிறக்கம் செய்யப்படலாம். ஓடை (ஸ்ட்ரீமிங்) என்பது ஒரு பயனரை நிரந்தரமாக சேமிக்க அனுமதிப்பதை விட பயனரின் கோரிக்கையின் பேரில் அல்லது "தேவைக்கேற்ப" உள்ளடக்கத்தைப் பதிவிறக்குவதும் பயன்படுத்துவதும் ஆகும்.

உள்ளடக்க விநியோக வலைப்பின்னல்கள் என அழைக்கப்படுவது சிறப்பு வலைப்பின்னல் அதிகம் கிடைக்கும் தன்மை மற்றும் உயர் செயல்திறன் இரண்டையும் உறுதி செய்வதன் மூலம் இணையத்தில் உள்ளடக்கத்தை விநியோகிக்க உதவுகின்றன.[3]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads